பாஜக பிரமுகரிடம் உரிய ஆவணம் இல்லாத 20 லட்சம் மதிப்பிலான புதிய 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்- வீடியோசேலத்தில் காவல் துறையினர் வாகன சோதனையின் போது, காரில் 20 லட்ச ருபாய் மதிப்பிலான புதிய 2000 ருபாய் நோட்டுக்களை எடுத்துவந்த பாஜக பிரமுகரிடம் உரிய ஆவணம் இல்லாததால், அவற்றை பறிமுதல் செய்தனர்.

சேலம் மாநகர் அஸ்தம்பட்டி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட குமாரசாமிபட்டி ஆயுதப்படை பின் புறம் உள்ள முத்துகுமாரசாமி கோவில் அருகே நேற்று மாலை காவல் ஆய்வாளர் கண்ணன் தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது அவ்வழியே வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர். அந்த காரில் இருந்த பை ஒன்றில் 926 புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் மற்றும் 100 ருபாய், 50 ருபாய் நோட்டுக்கள் என மொத்தம் 20 லட்சத்து ஐம்பது 55 ஆயிரம் ருபாய் பணம் இருந்தது தெரியவந்தது.

இது குறித்து காரில் இருந்த பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த அருண் என்பவரிடம் விசாரணை மேற்கொண்ட போது அவற்றுக்கு முறையான ஆவணங்கள் இல்லாததால், பணம் முழுவதையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த பணத்தை மாவட்ட கருவூலத்தில் காவல்துறையினர் ஒப்படைத்தனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.