ஆவணங்களை சமர்ப்பிக்காத பட்சத்தில் 200 சதவீதம் அபராதம்வங்கிகளில் இரண்டரை லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் செலுத்தும் நபர்கள் அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பிக்காத பட்சத்தில், டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கான வரியுடன் 200 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என வருவாய் துறை செயலர் தெரிவித்துள்ளார்.

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதனால் பழைய நோட்டுகளை வங்கிகள், தபால் அலுவலகங்களில் மாற்றிக் கொள்ளலாம் என பொதுமக்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில்  செய்தியாளர்களிடம் பேசிய வருவாய் துறை செயலாளர், தங்கள் கணக்குகளில் நவம்பர் 10 முதல் டிசம்பர் 30-ம் தேதிக்குள் இரண்டரை லட்சம் ரூபாய்க்கு அதிகமான தொகையை செலுத்தும் நபர்கள் அதற்குரிய உரிய ஆவணங்களை வங்கிகளில் தாக்கல் செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு தாக்கல் செய்யாத நபர்களுக்கு அத்தொகைக்கான வரியுடன் 200 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.  நகை வாங்குபவர்களிடமும் அந்தந்த நகைக்கடை உரிமையாளர்கள் பான் எண்,  கட்டாயம் சமர்பிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார். அவ்வாறு பான் எண் வாங்கவில்லை எனில், சம்பந்தப்பட்ட நகைக்கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.