அடுத்த குண்டு : 2000 ரூபாய் நோட்டு, இன்னும் 2 மாதத்தில் செல்லாமல் போகலாம் – பிரதமர் எச்சரிக்கை!ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி கோபேவில் இந்தியர்கள் இடையே பேசினார். அப்போது புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அவர் பேசியதாவது, ” இந்த நடவடிக்கை நாட்டை தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்று. யாருக்கும் சங்கடத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கை அல்ல.

சில குடும்பங்கள் திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். சிலர் மருத்துவமனைகளுக்கு சென்று வர வேண்டிய கட்டாயம் உள்ளவர்களாக உள்ளனர். இவர்களுக்கெல்லாம் மிகுந்த சங்கடங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனாலும் அவர்கள் எனது முடிவை ஏற்றுக் கொண்டுள்ளனர். இதனால் அவர்களுக்கு நான் தலைவணங்குகிறேன்.”

இதே போல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் பதுக்குவதற்கு எளிதாக இருக்கும் என்றும் இதனால் எதிர்காலத்திலும் கருப்பு பண பிரச்சனை தொடரும் என எதிர்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டிற்கு பதில் அளித்துள்ள பிரதமர் மோடி, டிசம்பர் 30 ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் இதே போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படாது என உறுதியாக சொல்ல முடியாது என கூறியுள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.