புதிய 2000 ரூபாய் வெளியான 3வது நாளிலேயே கள்ளநோட்டு?புதிய 2000 ரூபாய் நோட்டுகள் வந்த 3வது நாளில் கள்ளநோட்டு வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8ஆம் தேதி இரவு அறிவித்ததோடு, புதிய 500, 2000 ரூபாய் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றும், இதனை பொதுமக்கள் வங்கிகளில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறினார். இதனால், அதிர்ச்சி அடைந்த வியாபாரிகள், பொதுமக்கள் பணத்தை மாற்ற போராடி வருகின்றனர்.

இந்த நிலையில், புதிய 2000 ரூபாய் நோட்டுகள் வெளியாகியுள்ள 3வது நாளில் கர்நாடகா மாநிலம், சிக்மகளூரில் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாவும், இந்த பணத்தை காவல்துறையினர் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.