நம் தேசத்தந்தை காந்தியின் முகம் இல்லாமல் 2000 ரூபாய் நோட்டா???1000 ரூபாய் நோட்டை தொடர்ந்து, புதிய 2000 ரூபாய் நோட்டு படம்  வெளியாகியுள்ளது.

இதுவரை 5, 10, 20, 50, 100, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் இருந்து வந்த நிலையில் தற்போது 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த 2000 ரூபாய் நோட்டுகள் ஏற்கெனவே இந்திய பணங்கள் அச்சடிக்கப்படும் மைசூர் மையத்தில் அச்சடிக்கப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்திற்கு கொண்டுவரும் நடவடிக்கைகளில் ரிசர்வ் பங்க் ஆப் இந்தியா ஈடுபட்டிருப்பதாகவும் தி இந்து பிசினஸ் லைன் என்னும் ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மற்ற இந்திய ரூபாய் நோட்டுகளை போல இந்த 2000 ரூபாய் நோட்டில் காந்தி படம் இல்லை என்பது குறிப்பிட்த்தக்கது. காந்தி படம் இல்லாததால் இந்த நோட்டிற்கு எதிர்ப்பு வர வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆனால் இந்த செய்தி குறித்து இதுவரை ரிசர்வ் பங்க் ஆப் இந்தியா எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. அதே நேரத்தில் 2000 ரூபாய் நோட்டு குறித்து எந்த மறுப்பு செய்தியையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிட்த்தக்கது.

எனவே 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வருமா அல்லது வதந்தியாக இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.