2003 முஹமதியா மஸ்ஜித் குண்டு வெடிப்பு வழக்கில் மேல் முறையீடு செய்யாத மகாராஷ்டிர பாஜக அரசுமகாராஷ்டிரா மாநிலம் ரஹ்மத் நகரில் உள்ள முஹமதியா மஸ்ஜிதில் 2003 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் தேதி பயங்கர குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார் 34 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த குண்டு வெடிப்பு நடந்து பதிமூன்று வருடங்கள் கழித்து இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரை பர்பானி செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.ஜவால்கர் விடுதலை செய்தார். இவ்வழக்கில் விடுதலை செய்யப்பட்டவர்களில் 2008 ஆம் ஆண்டு நடந்த மலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ராகேஷ் தாவடே வும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

செஷன்ஸ் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வதற்கான 90  நாள் காலக்கெடு சமீபத்தில் முடிவுற்றும் மகாராஷ்டிர பா.ஜ.க அரசு இவ்வழக்கில் மேல் முறையீடு செய்யாமல் இருந்து வந்தது. இந்நிலையில் முஹமதியா மஸ்ஜிதின் இமாமான ஹஃபீஸ் அப்துல் காதிர் இவ்வழக்கில் மறு விசாரணை கோரி  விண்ணப்பித்துள்ளார். இவர் இந்த குண்டு வெடிப்பு தொடர்பான முந்தைய வழக்கில் புகார்தாரர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் தனது மனுவில், இவ்வழக்கு விசாரணை முழு பலத்தோடு விசாரிக்கப்படவில்லை என்றும் முக்கிய ஆதாரங்கள் எதுவும் நீதிமன்றம் முன் சமர்ப்பிக்கப்பட வில்லை என்றும் வழக்கு விசாரணையின் போது வழக்கு தொடர்பான ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஆதாரங்களையோ அல்லது சாட்சியங்களையோ நீதிமன்றம் விசாரிக்கவில்லை என்றும் இது வழக்கின் முடிவை வெகுவாக பாதித்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வளவும் இருக்க இவ்வழக்கு தீர்ப்பை எதிர்த்து மகாராஷ்டிர பா.ஜ.க. அரசு மேல்முறையீடு செய்யாததால் தான் மறு விசாரணை மனுவை தாக்கல் செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் “வழக்கு விசாரணையின் போக்கை பார்க்கும்போது இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்ட போது  அதனை எதிர்த்து மகாராஷ்டிர அரசு மேல்முறையீடு செய்யாது என்று தோன்றியது. இந்த குண்டு வெடிப்பில் பாதிக்கபப்ட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதனால் மகாராஷ்டிரா ஜாமியத் உலமாவை அணுகி அவர்களிடம் சட்ட நடவடிக்கைக்கு உதவி கோரினேன். உயர் நீதி மன்றங்களில் நீதி கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்.” என்று அவர் கூறியுள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.