எத்தனை முறை வேண்டுமானாலும் ரூ.2,500 ஏ.டி.எம்-ல் எடுத்துக் கொள்ளலாம்



ஒரு நாளைக்கு, வெவ்வேறு ஏ.டி.எம்-களில் எத்தனை முறை வேண்டுமானாலும் ரூ.2500 பொதுமக்கள் எடுத்துக் கொள்ளலாம் என மத்திய அரசின் பொருளாதார விவகாரத்துறை செயலர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.


புதிய நோட்டுகளை ஏ.டி.எம்-ல் ஒரு நாளைக்கு 2000 ரூபாய் வரை  மட்டுமே ஒருவரால் எடுக்க கூடிய நிலை இருந்தது. அது தற்போது மாற்றியமைக்கப்பட்டு ஒரு நாளைக்கு நீங்கள், ரூ.2500 ரூபாய் எடுத்துக் கொள்ளலாம், அதுவும் வெவ்வேறு ஏ-டி.எம்-களில் எத்தனை முறை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்று சக்தி காந்த தாஸ் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அதேபோல், வங்கிகளில் எடுக்கும் பணத்தின் மதிப்பு 4 ஆயிரத்திலிருந்து 4,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு வார காலத்தில், உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.20 ஆயிரம் என்பதை அதிகரித்து ரூ.24,000 வரை எடுத்துக் கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், விரைவில் கூடுதல் ஏ.டி.எம் மையங்கள் திறக்கப்படும். அதேபோல், நடமாடும் மைக்ரோ ஏ.டி.எம்-கள் அதிகரிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.