புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டில் எழுத்துப்பிழை? சமூக வலைதளங்களில் பரவும் தகவலால் பரபரப்புபிரதமர் மோடி கடந்த 8–ந்தேதி இரவு ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். அதற்கு பதிலாக புதிய ரூ 500,2000 தாள்கள் வழங்கப்படுகின்றன. இவற்றை வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் வாயிலாக மக்கள் நீண்ட வரிசையில் நின்று மாற்றி வருகின்றனர்.

கடந்த 2 நாட்களாக பொதுமக்கள் வங்கிகளில் நீண்ட வரிசையில் காத்து நின்று புதிய 2 ஆயிரம் ரூபாயை ஆசை, ஆசையாக வாங்கி சென்றனர். அந்த நோட்டுடன் ‘செல்பி’ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடவும் செய்தனர். புதிதாக வெளியிடப்பட்டுள்ள ரூபாய் நோட்டில் தமிழ், இந்தி, மராத்தி உள்ளிட்ட 15 மொழிகளில் 2 ஆயிரம் ரூபாய் என எழுதப்பட்டுள்ளது.

இதில் 6–வதாக இந்தியில் எழுதப்பட்டுள்ளது. அதில் எழுத்து பிழை உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது ‘தோ ஹஜார் ருபயா’ என்று குறிப்பிடுவதற்கு பதிலாக தவறாக ‘தோன் ஹஜார் ருபயா’ என எழுதப்பட்டுள்ளது. இதை சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். அவசர அவசரமாக ரூபாய் தாள்கள் அடிக்கப்பட்டதால் இந்த தவறு ஏற்பட்டிருக்கலாம் எனவும் சமூக வலைதளங்களில் சிலர் கூறி வருகின்றனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.