அமீரகத்தில் தேசிய தினத்தை முன்னிட்டு 300 க்கும் மேற்பட்ட இடங்களில் இலவச வைபை வசதி !அமீரகம் தனது 45 வது தேசிய தினத்தை எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் தேதி கொண்டாடவுள்ளது. இந்நிலையில் அமீரக தொலைத்தொடர்பு நிறுவனமான 'எடிஸலாட்' தேசிய தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அனைத்து அமீரகவாசிகளும் பயன்பெறும் வகையில் நாடு முழுவதும் 300க்கு மேற்பட்ட பொது இடங்களில், நவம்பர் 30 முதல் டிசம்பர் 3 வரை இலவச அதிவேக வைபை (WIFI) சேவையை வழங்குகிறது.

ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் இலவச வைபை சேவைகளுடன் கூடுதலாக ஷாப்பிங் மால்கள், உயர்தர காபிடேரியாக்கள், கடற்கரைகள், பூங்காக்கள் போன்ற பல்வேறு பொது இடங்களிலும் கிடைக்கும்.

வாடிக்கையாளர்கள் etisalat.ae/wifi என்ற இணைய தளத்திற்கு சென்றோ அல்லது ‘Around Me’ எனும் எடிஸலாட் ஆப் வழியாகவோ இலவச வைபை சேவை கிடைக்கும் இடங்களை அறியலாம்.

Source: Gulf News
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.