காஷ்மீர் 370யை திருத்தம் செய்ய மத்திய அரசு மீண்டும் முயற்சி!ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பு சட்டத்தின் 370வது பிரிவில் திருத்தம் செய்வது குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றம் முன்வந்துள்ளது.

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் SC-ST பிரிவினருக்கு அரசு பணியில் பதவி உயர்வுக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்து ஜம்மு – காஷ்மீர் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரனை நடந்து வருகிறது.

உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் ‘மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பு சட்டத்தின்  370வது பிரிவில் எந்த திருத்தமும் செய்ய முடியாது’ என்று கூறப்பட்டிருந்தது.

அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, அசோக் பூஷண் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. ‘அரசியலமைப்பு சட்டத்தின், 370வது பிரிவில் திருத்தம் செய்ய முடியுமா என்பது குறித்து விசாரிக்கப்படும். இந்த வழக்கில் மத்திய அரசும் வாதியாக சேர்க்கப்படும் என அமர்வு கூறியுள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.