முத்துப்பேட்டை இரும்பு கடையில் தீவிபத்து ரூ.3 லட்சம் பொருள் சேதம்முத்துப்பேட்டை அருகே உள்ள இரும்பு கடையில் தீவிபத்து ஏற்பட்டு ரூ.3 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தது.முத்துப்பேட்டை  மருதங்காவெளியை சேர்ந்தவர் அழகர் (28). முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே கீற்று கொட்டகையில் இரும்பு  கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றிருந்தார்   நள்ளிரவு கீற்று கொட்டகையில் தீப்பிடித்து மளமளவென பற்றி  எரிந்தது. தகவல் அறிந்ததும் முத்துப்பேட்டை தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மேலும் தீ  பரவாமல் அணைத்தனர். அதற்குள் கொட்டகை முழுவதும் எரிந்து  சாம்பலானது. பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் தீயில் எரிந்து  சேதமடைந்தன. சேத மதிப்பு ரூ.3 லட்சமாகும். இதுகுறித்து  முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து கடையில் தீப்பிடித்த காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.