4 மாதங்களுக்குப் பிறகு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியது காஷ்மீர்காஷ்மீரில் 4 மாதங்களுக்குப் பிறகு இயல்பு வாழ்க்கை திரும்பியது
காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 4 மாதங்களாக நிலவி வந்த பதற்றம் தணிந்ததைத் தொடர்ந்து, அலுவலகங்கள், கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் சனிக்கிழமை வழக்கம்போல் இயங்கத் தொடங்கின.
ஹிஸ்புல் பயங்கரவாதி பர்ஹான் வானி, கடந்த ஜூலை மாதம் காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து, வானியின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டபோது சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் மோதலில் ஈடுபட்ட 86 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமடைந்தனர்.
இதைத் தொடர்ந்து பள்ளிகள், கல்வி நிறுவனங்கள், கடைகள், அலுவலகங்கள், வணிக வளாகங்கள் மற்றும் பெட்ரோல் விற்பனையகங்கள் ஆகியவை மூடியே கிடந்தன.
86 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து பிரிவினைவாதிகள் அவ்வப்போது முழு அடைப்புப் போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்து வந்தனர்.
எனினும், அவ்வப்போது அவர்களின் போராட்டங்களில் தளர்வை அறிவிப்பது வழக்கம். பிரிவினைவாதிகள் தங்கள் போராட்டங்களை வார இறுதி நாள்களில் நிறுத்தி வைப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து சனிக்கிழமை முதல்முறையாக அலுவலகங்கள், கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் திறந்திருந்தன.
ஸ்ரீநகரில் போக்குவரத்து தொடங்கியது. மக்கள் தங்கள் அன்றாடப் பணிகளை மேற்கொண்டனர். வாகனப் போக்குவரத்தால் சாலைகளில் நெரிசல் ஏற்பட்டதையடுத்து, போக்குவரத்து போலீஸர் அதிக எண்ணிகையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.