50 நாடுகள் 500 போட்டியாளர்களுக்கு மத்தியில் சவுதி பெண் விருது பெற்றார்



வாடிக்கையாளர் சேவையில் சிறந்து விளங்கும் நிறுவனங்களை நிறுவகிப்பவர்களுக்கு உலக அளவில் வழங்கபடும் விருது தான் Stevie 2016 ஆண்டிற்கான இந்த விருதை சவுதியை சார்ந்த சகோதரி நுஹா யுசுப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

உலக அளவில் ஆஸ்கர் விருதுக்கு இணையாக கருதப்படுகின்ற இந்த விருதை ஒரு இஸ்லாமிய சகோதிரி பெற்றிருப்பது பலரையும் வியக்க வைத்திருக்கிறது.

சவுதி அரேபியாவில் சேவை நிறுவனங்களையும் தொழில் நிறுவனங்களையும் நடத்திவரும் அவர் உலக அளவில் அந்த விருதுக்காக போட்டி போட்ட உலகின் முக்கிய 50 நாடுகளை சார்ந்த 500 போட்டியாளர்களுக்கு மத்தியில் இருந்து நுஹா யுசுப் இந்த விருதுக்காக தேர்வு செய்யபட்டார்.

இது பற்றி அவர் குறிப்பிடும் போது எனது மார்க்கமும் எனது நாடும் தந்த ஊக்கமே என்னை இந்த உயர்ந்த இடத்தில் கொண்டு நிறுத்தியிருக்கிறது. நான் மேலும் சிறப்பான முறையில் எனது சேவைகளை செய்ய முயற்சிப்பேன் என்றும் அவர் கூறினார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.