உம்மல் குவைன் போக்குவரத்து விதிமீறல் அபராதம் 50% தள்ளுபடி !எதிர்வரும் 45 வது அமீரக தேசிய தினத்தை முன்னிட்டு உம்மல் குவைன் போக்குவரத்துத்துறை போக்குவரத்து விதிமீறல் அபராதங்களை 50 சதவிகிதம் தள்ளுபடியில் செலுத்தலாம் என்று அறிவித்துள்ளது.

2016 நவம்பர் 20 முதல் டிசம்பர் 31 வரை நடைமுறையில் இருக்கும் இந்த சிறப்பு சலுகை காலத்தில் வாகனப்பதிவு தொடர்பான அபராதங்கள் மற்றும் போக்குவரத்து விதிமீறல் அபராதங்கள் ஆகியவற்றை செலுத்தலாம், இவை அனைத்தும் நவம்பர் 20 ஆம் தேதிக்கு முன் பதிவு செய்யப்பட்ட போக்குவரத்து விதிமீறல் குற்றங்களாக இருக்க வேண்டும்.

2016 நவம்பர் 20 ஆம் தேதிக்குப் பின் நடைபெறும் போக்குவரத்து விதிமீறல் குற்றங்களை பொருத்தவரை வாகனத்தின் சொந்தக்காரர்கள் உம்மல் குவைன் போக்குவரத்துத் துறைக்கு நேரில் விஜயம் செய்தால் மட்டுமே அவர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சலுகை உம்மல் குவைனில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட ஆனால் பிற எமிரேட்டுக்களில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கும் பொருந்தும். இந்த அபராதங்களை உம்மல் குவைன் போக்குவரத்து துறையின் சேவை மையங்களிலோ அல்லது உள்துறை அமைச்சகத்தின் ஸ்மார்ட் ஆப் வழியாகவோ செலுத்தலாம்.

Source: Gulf News
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.