வங்கி வாசலில் உயிரிழந்த பெண்! உயிரை காவு வாங்கிய 500. 1000நீங்க வச்சிருக்கும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது!”நெஞ்சுவலி! வங்கி வாசலில் உயிரிழந்த பெண்!
உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டம் கேப்டன் கஞ்ச் பகுதியில் வங்கிக்கு சென்ற  40 வயதான பெண் சலவைத் தொழிலாளி, வங்கி வாசலிலேயே உயிரிழந்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவர் வைத்திருந்த இரண்டு 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அதிகாரிகள் அறிவித்த உடன் அந்த பெண் அதிர்ச்சியில் நெஞ்சுவலி வந்து உயிரிழந்தார். கையில் இருந்த 2, ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் மற்றும் பாஸ்புக்குடன் அந்த பெண் சடலமாக கிடக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதே நேரம் அந்த பெண்ணின் உயிரிழப்பிற்கு அது காரணம் அல்ல என்றும் அவர் வங்கியில் போட்டு வைத்திருந்த 2000 ஆயிரம் ரூபாயை இரண்டு ஆயிரம் ரூபாய் நோட்டுக்களாக எடுத்து வெளியே வந்த பிறகு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்ததாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று வருவாய் துறை அதிகாரிகள் விசாரிப்பார்கள் என்றும் வங்கி ஊழியர்கள் மீது தவறு இருந்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.