சாக்கடையில் வீசப்பட்ட பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள்..!அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தி அருகே சாக்கடை கால்வாயில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்க சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்த நிலையில், சட்டத்திற்கு புறம்பாக கருப்புப்பணம் பதுக்கியவர்கள், வருமானவரி கட்டாதவர்கள் உள்ளிட்டோர் தெய்வதறியாது திகைத்து வருகின்றனர்.

இந்நிலையில் அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தி அருகே ருக்மினி நகர் பகுதியில் சாக்கடை கால்வாயில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டுடாக கிடந்தன.

அந்த நோட்டுகள் கழிவுநீரில் மிதந்ததால், அவற்றை பார்த்த பொதுமக்கள் போலீசுக்கு தகவல் அளித்தனர். குப்பைகளை கொட்டும் கவர்களில் பழைய ரூபாய் நோட்டுகளை எடுத்துவந்து சாக்கடையில் மர்மநபர்கள் கொட்டியது தெரியவந்தது.

அந்த பணத்தை சிலர் எடுத்து கொண்டு மாயமானதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.