உத்திரபிரதேச பஞ்சாயத் தேர்தல்: மோடியின் தொகுதியில் 58 க்கு 50 சீட்களை இழந்த பா.ஜ.க.உத்திரபிரதேசத்தில் 2014 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பா.ஜ.க. பெற்றது. ஆனால் தற்போது நடைபெற்ற பஞ்சாயத் தேர்தல்களில் அக்கட்சி படுதோல்வியடைந்துள்ளது.
மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் 58 க்கு 50 இடங்களில் பா.ஜ.க தோல்வியடைந்துள்ளது. மேலும் ராஜ்னாத்சிங்கின் தொகுதியில் மொத்தமுள்ள 28 இடங்களில் வெறும் 4 இடங்களில் மட்டுமே பா.ஜ.க. வென்றுள்ளது. மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா தொகுதியில் மொத்தமுள்ள 56 இடங்களில் 49  இல் பா.ஜ.க. தோல்வியடைந்துள்ளது.
உத்திர பிரதேச சட்டமன்ற தேர்தல் வரும் 2017 ஆம் ஆண்டு நடத்தப்பட இருக்கின்ற நிலையில் மக்கள் மத்தியில் பா.ஜ.க.வின் செல்வாக்கு இந்த பஞ்சாயத் தேர்தல்கள் மூலம் தெரியவந்துள்ளது. இந்த தேர்தல்களில் மாயாவதியின் பஹுஜன் சமாஜ் கட்சியும் ஆளும் சமாஜ்வாடி கட்சியும் பெரும் வெற்றிகளை குவித்துள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.