மோடியின் நண்பர்கள் விஜய் மல்லையா உள்அட் 63 கோடீசுவரர்களின் ரூ.7,016 கோடி கடன் தள்ளுபடி எஸ்பிஐ திட்டம்?500,1000 ரூபாய் நோட்டுகளுக்கு கடந்த 8-ந் தேதி தடை விதிக்கப்பட்டது. இந்த ரூபாய் நோட்டுகளை வங்கி யில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டதையடுத்து கடந்த 9-ந் தேதியில் இருந்து பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூபாய் நோட்டுகளை மாற்றி வருகிறார்கள்.

உழைத்து சம்பாதித்த பணத்தை, வங்கியில் இருந்தும், ஏ.டி.எம்-மில் இருந்தும் எடுப்பதற்கு பல மடங்கு உழைக்க வேண்டியிருக்கிறது. ஒருநாளைக்கு 2,000 ரூபாய் எடுப்பதற்கே குறைந்தது இரண்டு மணி நேரமாகிறது. ஏ.டி.எம்-மில் ஒருநாளைக்கு 2,500 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும்; வங்கிகளில் நாள் ஒன்றுக்கு 4,500 ரூபாய் மட்டுமே மாற்றித்தர முடியும்; ஒருவரே திரும்பத்திரும்ப வங்கிக்கு வருதைத் தடுக்க விரலில் மை வைக்கப்படும் என மத்திய அரசு புதுப்புது ஐடியாக்களைக் கொண்டு வந்தாலும், நெரிசல் குறைந்தபாடில்லை. அன்றாடச் செலவுகளுக்குத் தேவையான பணத்தை எடுப்பதற்குள் மக்கள் சின்னாபின்னமாகிவிடுகின்றனர்.

ஆனால் கோடீஸ்வரர்களின் ரூ.7,016 கோடி கடன் தொகையை தள்ளுபடி செய்ய ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடன் தள்ளபடி செய்யப்பட்ட முதல் 10 நிறுவனங்கள்

1. கிங்பிஷர் ஏர்லைன்ஸ்: ரூ.1,201 கோடி
2. கேஎஸ் ஆயில்: ரூ.596 கோடி
3.சூர்யா பார்மசிடிகல்: ரூ.526 கோடி
4. ஜிஇடி இன்ஜீனியரிங் கன்ஸ்டிரக்சன்ஸ்: ரூ.400 கோடி
5. சாய் இன்போ சிஸ்டம்: ரூ.376 கோடி
6. விஎம்சி சிஸ்டம்ஸ்: ரூ.370 கோடி
7. அக்னிட் கல்வி நிறுவனம்: ரூ.315 கோடி
8. ஸ்ரீகணேஷ் ஜிவ்லரி: ரூ.313 கோடி
9. அபெக்ஸ் என்கோன் நிறுவனம்: ரூ.266 கோடி
10. யூரோ செராமிக்ஸ்: ரூ.266 கோடி.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.