சவூதி அரேபியாவில் இளம் பெண் பாலியல் பலாத்காரம் குற்றவாளிகளுக்கு 7 ஆயிரம் சவுக்கடி 52 ஆண்டு சிறைசவூதி அரேபியாவில் குடும்பத்தினர் முன் இளம் பெண் பாலியல் பலாத்காரம்  செய்து    வீட்டில்  
இருந்த பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து  சென்ற கொடூர  குற்றவாளிகளுக்கு 7 ஆயிரம் சவுக்கடி 52 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சவுதி அரேபிய நீதி மன்றம் கூட்டு பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட 4 குற்றவாளிகளுக்கு 7 ஆயிரம் சவுக்கடியும் 52 வருட சிறைத்தண்டனையும் விதித்து உள்ளது .

கூட்டுபாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு ஜித்தா நீதி மன்றம் இந்த் தண்டனைஅயை வழங்கி உள்ளது. ஒரு குற்றவாளிக்கு 2500  சவுக்கடிகளும் அதனை 50 தடவைகளாக பெற்று கொள்ளலாம் எனவும் 17 வருட சிறைத்தண்டனையும் வழங்கி உள்ளது. இரண்டையும் சேர்த்து அனுப்விப்பது என்றால் 1500 சவுக்கடியும் 15 ஆண்டு சிறைத்தண்டனையும் என தீர்ப்பு வழங்கி உள்ளது.  4 வது குற்றவாளிக்கு  5 வருட சிறைத்தண்டனையும் 1500 சவுக்கடியும் வழங்கபட்டு உள்ளது.

சம்பந்தபட்ட குற்றவாளிகள் சம்பவத்தன்று ஜித்தாவில் உள்ள பாதிக்கபட்ட பெண்ணின் வீட்டை உடைத்து உள்ளே புகுந்து உள்ளனர். அங்கு அவரது கண்வரையும், அவரது ம்களையும் கட்டி போட்டு விட்டு அந்த பெண்ணை  நிர்வாணப்படுத்தி கணவன் மற்றும் மகள் முன்னால் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.

பின்னர் வீட்டில் இருந்த் 10 ஆயிரம் ரியால் மற்றும் 8 மொபைல் போன்களை திருடி சென்றனர்.பின்னர் மீண்டும் வந்து கத்தி முனையில் மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

பின்னர் பாதிகபட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பொது மக்கள் முன்னிலையில் குற்றத்தை ஒப்பு கொண்டனர். பொது மக்கள் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க கோரினர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.