ரூபாய் நோட்டு முடக்கப் பின்னணி 86 சதவிகிதம் இங்கு 500 மற்றும் 1000 ரூபாய்களே!500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள்  செல்லாது என்று அறிவிக்கப்பட்டதன் பின்னணியில் பல அரசியல் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் இதன் மூலம் இந்தியாவில் இருக்கும் கருப்புப் பணத்தை முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்கிறார்கள். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மட்டும் குறிவைப்பது கருப்புப்பணத்தை கட்டுப்படுத்துமா? இந்திய ரிசர்வ் வங்கியின் தரவறிக்கை படி நம் நாட்டில் மொத்தம் 17, 54,000 கோடி ரூபாய் இந்தியப் பணம் சுழற்சி முறையில் உள்ளது. இதில் எண்ணிக்கையின் அடிப்படையில் 10 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளே அதிகம் இருந்தாலும், மதிப்பீட்டின் அடிப்படையில் அதிகபட்சமாக 500 ரூபாய் நோட்டுகள்  45 சதவிகிதமும் 1000 ரூபாய் நோட்டுகள் 39 சதவிகிதமும் உள்ளன.

ரிசர்வ் வங்கியின் தரவறிக்கையையும் அரசு அறிவிப்பையும் ஒப்பிடுகையில் மொத்தம் 6,32,000 கோடி ரூபாயாக சுழற்சியில் இருக்கும் 1000 நோட்டுகள் செல்லாக்காசாகும். இதற்கு மாற்றாக அரசு வெளியிடும் 2000 ரூபாய் தாள்களும் குறைந்த அளவிலேயே சுழற்சியில் இருக்கும்.

ரிசர்வ் வங்கியின் தரவறிக்கையில் குறிப்பிட்டுள்ளதன்படி சென்ற ஆண்டில் மட்டும் 6,32,000 ரூபாய் வரையிலான கள்ள நோட்டுகள் வங்கிகளின் பரிசோதனையில் சிக்கியுள்ளன. அவற்றில் 4 லட்சம் ரூபாய் வரை 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள்தான். கள்ள நோட்டுப் புழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தின்படி  இந்த திடீர் மாற்றத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. 100 ரூபாய் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருந்தாலும் தற்போது எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கை சிறிது மாற்றத்தைக் கொண்டுவரும் என்கின்றனர் பொருளாதார நிபுணத்துவ வட்டாரங்கள்.

வங்கிகளின் நிலை என்ன?
மற்றொருபுறம் ரிசர்வ் வங்கியின் மிகப்பெரிய பண சேகரிப்பு வங்கிகளான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் அதன் கிளை வங்கிகளிலும் , இதர 1,173 தேசிய வங்கிகளும், 176 தனியார் வங்கிகளும் அடுத்த இருநாட்கள் இயங்காது என அரசு அறிவித்துள்ளது.நவம்பர் 10-ம் தேதி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வரும் மக்கள் கூட்டத்தினை தேசிய வங்கிகள் அனைத்தும் எப்படிச் சமாளிக்க இருக்கின்றன என்னும் கேள்வி எழுந்துள்ளது. மேலும் இந்த இருநாட்களில் வங்கிகள தத்தமது தானியங்கிப் பணம் கொடுக்கும் இயந்திரங்களில் ரூபாய் நோட்டுகளை மாற்றியாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சாதாரணமாக ஒவ்வொரு முறை ரூபாய் நோட்டை வைக்கச் செல்லும் வாகனத்துடன் நான்கு காவலாளிகள் இருப்பார்கள். மிகக் குறுகிய நாட்களுக்குள் பணத்தை மாற்றியாக வேண்டும் என்னும் நிலையில், செயல்பாட்டைத் துரிதப்படுத்த வண்டிகளுடன் இரண்டு காவலாளிகளை மட்டுமே அழைத்துச் செல்ல நேரிடும். இது பணத்துக்கும் அதனை எடுத்துச் செல்பவர்களுக்கும் பாதுகாப்பானதா என்கிற கேள்வியையும் எழுப்பி இருக்கிறது.

திட்டத்தைப் பெரும்பாலானவர்கள் வரவேற்றாலும், குறுகிய காலத்தில் இதனை நடைமுறைப்படுத்துவது சிக்கலாகிவிடாதா மோடி சர்க்கார்?
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.