கேரளாவில் இஸ்லாத்தை ஏற்ற இளைஞர் படுகொலையில் 8 ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகள் கைது.கேரள மாநிலம் திருரங்காடியைச் சார்ந்த அனில்குமார் என்ற 32 வயது இளைஞர் 6 மாதங்களுக்கு முன்பு இஸ்லாத்தை தழுவி தனது பெயரை ஃபைஸல் என்று மாற்றிக்கொண்டார். அதனை தொடர்ந்து நவம்பர் மாதம் 17 ஆம் தேதி அவரது மனைவி மற்றும் 3 குழந்தைகள் இஸ்லாத்தை ஏற்றனர்.
இந்நிலையில் நவம்பர் 19 அன்று அதிகாலை தனது மனைவியின் பெற்றோரை ரயில் நிலையத்திலிருந்து அழைத்து வருவதற்காக ஆட்டோவில் சென்ற ஃபைஸலை மர்ம நபர்கள் வெட்டி படுகொலைச் செய்தனர். அப்பகுதியில் ஃபஜ்ர் தொழுகைக்கு சென்றவர்கள் மரணித்த நிலையில் கிடந்த ஃபைஸலின் உடலைக் கண்டு போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இந்த கொலையின் பின்னணியில் சங்க்பரிவார சக்திகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது.
தற்போது இவ்வழக்கில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த புல்லாணி வினோத் (39), புல்லாணி சஜீஷ் (32), புல்லிக்கள் ஹரிதாசன் (30), ஷாஜி (39), சனத் சுனில் (39), களத்தில் பிரதீப் (32), பள்ளிபாடி லிஜேஷ் (27), மற்றும் கோட்டையில் ஜெயபிரகாஷ் ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலையில் ஃபைசலின் குடும்பத்தினரும் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆறு மாதங்களுக்கு முன் ஃபைசல் இஸ்லாத்தை தழுவியதும் அவரது குடும்பத்தினர்களிடம் இருந்து அவருக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாக தெரிகிறது. தற்போது கைது செய்யப்பட்டவர்களிடம் ஃபைசலை கொலை செய்ததன் பின்னணி குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக கூறிய காவல்துறையினர் தாங்கள் இந்த கொலையை செய்தவர்களை இன்னும் தேடி வருவதாக கூறியுள்ளனர்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.