கான்பூர் ரயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 91 ஆக உயர்ந்தது- போட்டோ இணைப்பு
கான்பூர் அருகே பாட்னா இந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 91 ஆக உயர்ந்துள்ளது.

பாட்னா -இந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் கான்பூர் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 91 ஆக அதிகரித்துள்ளது. கான்பூர் அருகே பொக்ரியான் என்ற இடத்தில் இந்த ரயில் இன்று அதிகாலையில் தடம் புரண்டது. அதிகாலை 5 மணிக்கு ஏற்பட்ட விபத்தில் ரயிலின் 14 பெட்டிகள் தடம் புரண்டன. தகவல் அறிந்து மீட்பு குழுக்கள், மருத்துவக் குழுக்கள் விரைந்து வந்தன.

விழுந்து கிடந்த ரயில் பெட்டிகளை அகற்றி அதற்குள் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டது. இதுவரை 91 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக கான்பூர் ஐஜி ஜாகிர் அகமது கூறியுள்ளார்.

ரவிபத்துக்குள்ளான ரயில் பெட்டிகள் பல உருக்குலைந்து போய் விட்டன. ஒன்றின் மீது ஒன்றாக விழுந்து கிடப்பதால் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் பெரும் சிரமமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.