இவ்வுலக வாழ்வில் அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகளைக் கொடுத்துள்ளான்........!!!
இவ்வுலக வாழ்வில் அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகளைக் கொடுத்துள்ளான்........!!!
சிலருக்கு தாய் இல்லை......!!!
சிலருக்கு தந்தை இல்லை......!!!
சிலருக்கு இருவரும் இல்லை......!!!
சிலருக்கு திருமணமாகவில்லை......!!!
சிலருக்கு திருமண வாழ்வில் நிம்மதி இல்லை.......!!!
சிலருக்கு குழந்தை பாக்கியம் இல்லை.........!!!
சிலருக்கு சரியான வேலை அமைவதில்லை.....!!!
சிலருக்கு ஊனமுற்ற குழந்தை....!!!
சிலருக்கு திருமண உறவு பிரிந்து விவாகரத்தான நிலை......!!!
சிலருக்கு குடும்ப உறவுகளால் சிக்கல்....!
சிலருக்கு உடல்நிலை சிரியில்லாமல் நோன்பு வைக்க முடியவில்லை....!
சிலருக்கு நிம்மதியே இல்லை.....!
நிலை இன்னும் எவ்வளவோ அடுக்கிக்கொண்டே போகலாம்.......!!!
சொல்ல முடியாத சோகங்களை மனதில் சுமந்து கொண்டு,
வெளியில் சிரித்து
உள்ளே அழுபவர்கள் நம்மில் இல்லாமல் இல்லை........!!!
அல்லாஹ்விடமே உங்கள் கவலைகளை முறையிடுங்கள்.
அவனை நம்பியவர்களை அவன் கை விட்டதாக சரித்திரமே இல்லை.........!!!
நாம் ஏந்திய கைகளை வெறும் கைகளாக அனுப்ப அல்லாஹ் வெட்க்கப்படுகிறான்....!!!
நாம் நினைக்கிறோம், நமக்கு மட்டும் தான் கவலை இருக்கிறதென்று ,
இல்லை எல்லோருக்கும் ஒவ்வொரு வகையில் சோதனை உள்ளது .......!!!
நம் அல்லாஹ், நம் மீது அளவில்லா அன்பு கொண்டவன்.....!!!
அவன் எது செய்தாலும் நமக்கு நன்மையானதாக இருக்கும்......!!!
நம்மிடம் இருந்து ஒன்றை { அது உறவாக இருந்தாலும், உடமைகளாக இருந்தாலும் } நீக்கினால் அதற்கு பகரமாக அதைவிடச் சிறந்த ஒன்றை வழங்காமல் இருக்கவே மாட்டான்......!!!
அல்லாஹ் யார் மீது அதிக அன்பு வைத்துள்ளானோ அவர்களையே அதிகம் சோதிப்பான்...........!!!
சோதனைகள் அதிகமாகும் போது அந்த தூயவனை அதிகமதிகமாக நெருங்க வேண்டும்...........!!!
அவனிடமே முழுமையாக நம்மையும் நம் கவலைகளையும் ஒப்படைத்து விடவேண்டும்........!!!
சுஜூதில் அதிகமதிகமாக பிரார்த்தனை செய்ய வேண்டும்.........!!!
நிச்சயமாக துன்பத்திற்கு பின்னால்
பெரியதொரு இன்பத்தை அல்லாஹ் வழங்கியே தீருவான்.......!!!
ஒரு அடியான் அல்லாஹ்விடத்தில் கையேந்திக் கேட்கும் போது வெறுங்கையாக திருப்பியனுப்ப அல்லாஹ் வெட்க்கப்படுகிறான்...!!
என்நிலையிலும் அல்லாஹ்வை சார்ந்திருங்கள்.........!!!
வெற்றியடைவீர்கள்
இன்ஷா அல்லாஹ்....
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.