இந்து முன்னணி நிர்வாகி இந்து மக்கள் கட்சி தீவிரவாதிகளால் வெட்டிக்கொலைதிண்டுக்கல்லில் இந்து முன்னணி பிரமுகர் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். அவரைக் காப்பாற்ற வந்த மனைவி அரிவாளால் வெட்டப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திண்டுக்கல் நாகல் நகர் சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மணி மாறன். தட்டு வண்டி ஓட்டும் தொழில் செய்து வந்தார்.

இந்து மக்கள் கட்சியில் தீவிரமாக செயல்பட்டு வந்த மணி மாறன் சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி இந்து முன்னணியில் இணைந்தார்.

இந்நிலையில் நேற்றிரவு வீட்டில் தனது குடும்பத்துடன் இருந்த போது அங்கு புகுந்த மர்ம நபர்கள் மணி மாறனை கத்தி மற்றும் அரிவாளால் பயங்கரமாகத் தாக்கினர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மணி மாறனை அரிவாளால் வெட்டிய போது அவர்களை தடுக்க முயன்ற மனைவி பிரியாவிற்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

இதுகுறித்து மணிமாறன் மனைவி பிரியா கூறுகையில், “எனது கணவர் இந்து முன்னணியில் இருந்தார். விநாயகர் சிலை வைப்பதில் இந்து மக்கள் கட்சியினருக்கும், கணவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. இந்து மக்கள் கட்சியை சேர்ந்த நிர்வாகி தர்மா மற்றும் ராகவன் உள்பட பலர் எனது கண் முன்னே கணவரை வெட்டிக் கொன்றுவிட்டனர்” என்றார்.

இதுகுறித்து திண்டுக்கல் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.