கருப்பை வெள்ளையாக்கிய பதஞ்சலி தந்திரம்.வணிக சந்தையில் ஒன்றுக்கும் உதவாமல் மக்களால் புறக்கணிக்கப்பட்ட பதஞ்சலி பொருட்களின் உற்பத்தி நிறுவனத்தின் பாபா ராம்தேவ் மற்றும் ஆச்சார்யா பாலகிருஷ்ண ஆகியோர் கடந்த மாதம் பதஞ்சலி விற்பனையால் தங்களுக்கு பல்லாயிரம் கோடி லாபம் என ஒரு செய்தியை வெளியிட்டிருந்தனர்.

ஆனால் உண்மை நிலை அதுவல்ல பதஞ்சலி பொருட்கள் மக்கள் மத்தியில் அதிருப்தியை தான் ஏற்படுத்தியது. பதஞ்சலி முகவர்கள் பலர் தங்களது உரிமத்தை திருப்பி ஒப்ப்டைத்து இழுத்து மூடி விட்டனர்.
ஆனாலும் பதஞ்சலியால் பல்லாயிரம் கோடிகள் லாபம் என்று ஆச்சார்ய பாலகிருஷ்ணன் தம்பட்டம் அடித்ததின் மர்மம் என்
அதன் முடிச்சுகள் தான் இப்போது மோடியின் தடாலடி அறிவிப்பால் அவிழ்த்து விடப்பட்டுள்ளது.

பாபா ராம்தேவிடம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல ஆயிரம் கோடி கறுப்பு பண முட்டைகள் பதஞ்சலியின் பெயரால் பளீரென வெள்ளை நிறம் பூண்டுள்ளது.
ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்போவது பதஞ்சலி வகையராக்களுக்கு முன்னமே சமிக்ஞை செய்யப்பட்டிருக்கிறது.

ஆகவே பதஞ்சலி எனும் நாடக கம்பெனியை உருவாக்கி அதை பட்டி தொட்டியெல்லாம் அறங்கேற்றி அதன் மூலம் கொல்லை லாபம் என்று கொள்ளை அடித்த கள்ள நோட்டுக்களுக்கு வெள்ளை அடிக்கப்பட்டு விட்டது.
ஒன்றுக்கும் உதவாத பதஞ்சலி உற்பத்திகள் ஒரே வருடத்தில் தரவரிசை பட்டியலில் முதல் பத்து இடத்திற்கு வந்துள்ளது என்பதை கீழ்பாக்கம் ஐசியு வில் இருப்பவன் கூட நம்ப மாட்டான்.
ஆனால் அம்பானியின் அதளபாதாள தொழில் உத்தியில் இதெல்லாம் சாதாரண விசயம்.

மோடி எனும் ரோபோ பொம்மையின் ரிமோட் கண்ட்ரோல் கார்ப்ரேட்டுகளின் கையில் இருப்பதால் அன்னாடங்காச்சியின் கெதி அதோகெதி தான்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.