சந்தேகத்தைக் கிளப்பும் ஞானசாரவின் நிலைப்பாடுமுஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம் ஏதோவொரு வழியில் நிறுத்தப்படுவது மகிழ்ச்சியான விடயம்தான்.அந்த வகையில்,ஞானசாரவின் அறிவிப்பு தொடர்பில் முஸ்லிம்கள் மகிழ்ச்சியடையலாம். ஆனால்,இனிமேல்தான் முஸ்லிம்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.

முஸ்லிம்களுக்கு எதிராக இவ்வளவு ஆக்ரோஷமாக செயற்பட்ட-முஸ்லிம்கள் அனைவரையும் அழித்தொழிக்க விரும்பிய ஞானசார விஜயதாஸவின் ஒரேயொரு சந்திப்பை அடுத்து தலைகீழாக மாறுகிறார் என்றால்-அவரது பழைய நிலைப்பாட்டை முழுமையாகக் கைவிடுகிறார் என்றால் நாம் கொஞ்சம் சிந்தித்தே ஆக வேண்டும்.

விஜயதாஸவின் சர்ச்சைக்குரிய நாடாளுமன்ற உரை,அந்த உரையாகவே இருக்கின்ற ஞானசாராவின் நிலைப்பாடு மற்றும் தனக்கு விரும்பாதவர்களை அழிப்பதற்கு ரணில் பயன்படுத்தும் ஆயுதம் போன்றவற்றை ஆராய்ந்து பார்த்துத்தான் முஸ்லிம்கள் ஒரு நிலைப்பாட்டுக்கு வர வேண்டும்.உறுதியான வாக்குறுதி ஒன்று வழங்கப்படவில்லையென்றால் ஞானசார அவரது நிலைப்பாட்டை மாற்றி இருக்கமாட்டார் என்ற உண்மையை நாம் முதலில் விளங்கிக்கொள்ள வேண்டும்.

இந்த அரசை உருவாக்குவதற்காக முஸ்லிம்களின் 90 வீத வாக்குகள் அளிக்கப்பட்டன என்பதற்காக இந்த அரசு முழுக்க முழுக்க முஸ்லிம்களுக்கு ஆதரவாக செயற்படும் என்று நாம் நினைக்கக்கூடாது. சூழிநிலைக்கு ஏற்ப-அரசின் இருப்புக்கு ஏற்பவே எந்த அரசும் காய் நகர்த்தும்.நன்றி-விசுவாசம் என்பதெல்லாம் அரசியல் கிடையாது.

முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்தைத் தூண்டினால்தான் ஆட்சியைத் தக்கவைக்க, முடியும் என்ற நிலை தோன்றினால் அதையும் செய்வதற்கு ஆட்சியாளர்கள் தயங்கமாட்டார்கள்.அரசியலில் இதெல்லாம் சகஜம்.

[எம்.ஐ.முபாறக்]
மடவல நியூஸ்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.