தேர்தலில் அபார வெற்றி: அமெரிக்க அதிபராக பதவியேற்கிறார் டொனால்டு டிரம்ப்அமெரிக்க அதிபராக ஜனநாயகக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து வரும் ஆண்டு 2017 ஜனவரி  20ம் தேதி  அமெரிக்காவின் புதிய அதிபராக டிரம்ப் பதவி ஏற்க உள்ளார். குடியரசு அமெரிக்காவின் 45வது அதிபராக டொனால்டு டிரம்ப் தேர்வானார். 276 வாக்குகளபை் பெற்று டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபரானார். அவரை எதிர்த்து நின்ற ஹிலாரி கிளிண்டன் 218 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியைத் தழுவினார். அரசியல் பின்புலம்  அல்லாத ஒருவர் அமெரிக்க அதிபாராக தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்க அதிபர்களில் மிகவும் வயதான  அதிபரும் டொனால்டு டிரம்ப்பே ஆவார். இதனையடுத்து, வரும் டிசம்பர் 19ம் தேதி  பிரதிநிதிகள் கூடி  முறைப்படி அதிபரை தேர்வு செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதிபர் தேர்வுடன் துணை  அதிபர்  தேர்வும் நடைபெறுகிறது. துணை  அதிபருக்கு ஜனநாயக கட்சி சார்பில் டிம்கைனே,  குடியரசுக் கட்சி சார்பில் மைக்பென்ஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நேற்று விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. தற்போதைய அமெரிக்க அதிபராக பராக்  ஒபாமா உள்ளார்.  அவரது பதவிக்காலம் 2017 ஜனவரி 20ம் தேதியுடன் முடிவடைகிறது.  எனவே, அமெரிக்காவின் 45வது புதிய அதிபரை தேர்வு செய்யும்  தேர்தல், அமெரிக்க நாட்டு  பாரம்பரியப்படி நவம்பர் மாதம் வரும் முதல்  திங்கட்கிழமைக்கு அடுத்த நாளான செவ்வாய்க்கிழமையான  நேற்று நடைபெற்றது. முக்கிய கட்சிகளான ஜனநாயக கட்சி  சார்பில் ஹிலாரி  கிளின்டனும், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்டு   டிரம்பும் வேட்பாளராக நிறுத்தப்பட்டனர்.

நேற்று முன்தினம் பிரசாரம் முடிந்து திட்டமிட்டபடி நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது. அமெரிக்க மக்கள் தொகையில் சுமார் 20 கோடி பேர் இந்த  தேர்தலில் ஓட்டு போட  முன்பதிவு செய்து இருந்தனர். அவர்கள் அனைவரும் நீண்ட வரிசையில் நின்று  தங்கள் ஓட்டுக்களை செலுத்தினர்.  இந்த ஓட்டுப்பதிவு முடிந்ததும் அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களிலும் வாக்கு எண்ணப்பட்டது. இதில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்  டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.