ரேஸ்மா பீவி பரிதாபமாக உயிரிழப்பு.! நர்சு தாக்கியதால்லஞ்சம் கொடுக்காததால் பிரசவத்திற்கு வந்திருந்த ரேஸ்மா பீவி தாக்கிய நர்சு.!பரிதாபமாக உயிரிழப்பு.!

மேற்கு வங்காளம் மாநிலம், கொல்காத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் என்ற மருத்துவமனையில் பிரசவத்திற்காக டெகானா என்ற ஊரை சேர்ந்த ரேஸ்மா பீவி (20) என்பவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த மருத்துவமனையில் சிகிச்சைபெற குறைந்த அளவு கட்டணம் செலுத்த வேண்டும். அந்த கட்டணத்தை ரேஸ்மா பீவி செலுத்தியுள்ளார்.

ஆனால், மருத்துவமனையில் இருந்த நர்சு ஒருவர் லஞ்சமாக பணம் வேண்டும் என்று கூறியுள்ளார்.

ரேஸ்மா பீவி என்னிடம் பணம் இல்லை என்று தெரிவித்துள்ளார். ஆனால் இதனை ஏற்க மறுத்த நர்சு அவரை கீழே பிடித்து தள்ளிவிட்டுள்ளார்.

 இதனால் பலவீனமாக இருந்த ரேஸ்மா மயக்கம் அடைந்தார். உடனடியாக இதனை பார்த்த மற்ற டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்துள்ளனர்.

ஆனால், சிகிச்சை பலனின்றி ரேஸ்மா பீவி உயிரிழந்தார். இந்த சம்பவத்தை கண்டித்து அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனை அறிந்த போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சென்று உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி மறியலை கைவிட வைத்தனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.