வங்கிகளுக்கு வருமான வரித்துறை அதிரடி உத்தரவு..!2.5 லட்ச ரூபாய்க்கு அதிகமாக டெபாசிட் செய்துள்ளவர்களின் விபரங்களை அளிக்குமாறு வங்கிகளை வருமானவரித்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் மாற்றவும் டெபாசிட் செய்யவும் வரும் டிசம்பர் 30ந்தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.  2.5 லட்ச ரூபாய்க்கு மேல் வங்கிகளில் டெபாசிட் செய்பவர்களின் விபரங்கள் கண்காணிக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்திருந்தது.

கறுப்பு பணத்தை ஒழிக்க இந்த நடவடிக்கை என பிரதமர் மோடி விளக்கம் அளித்திருந்தார்.  கடந்த இரண்டு நாட்களாக பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் வங்கிகளில் அதிக அளவு டெபாசிட் செய்யப்பட்டு வருகின்றன.

இதையடுத்து 2.5 லட்ச ரூபாய்க்கு மேல் வங்கிகளில் டெபாசிட் செய்தவர்களின் விபரங்களை அளிக்குமாறு  வங்கிகளிடம் வருமானவரித்துறை கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்பு 10 லட்ச ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்பவர்களின் விபரங்களை மட்டுமே வருமானவரித்துறை வங்கிகளிடமிருந்து கேட்கும். பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த அளவு 2.5 லட்சமாகக் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.