பணத்தை இந்தத்தொட்டியில போடுங்க..!'- அசத்தும் இஸ்லாமிய அமைப்பு500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் முண்டியடிக்கும் இந்த நேரத்தில் மாற்ற முடியாத கறுப்புப் பணத்தை இந்த பணத் தொட்டியில் போடுங்கள் என்று பகிரங்கமாக அறைகூவல் விடுத்துள்ளது இந்திய தேசிய லீக் கட்சி.

பயன்பாட்டில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் கடந்த 8-ம் தேதி நள்ளிரவு முதல் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக அறிவித்தார். இதனால் கையில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியாமல் மக்கள் சிரமப்பட்டனர். பெரும்பாலானவர்கள் கையில் 500, 1000 ரூபாய்கள் இருந்தும் அன்றாடத் தேவைகளை கூட சந்திக்க முடியாமல் அவதியடைந்தனர். இன்று முதல் வங்கிகளில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் மாற்றப்படுவதால் அங்கு மக்கள் கூட்டம் அலைமோதின.

அரசு நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் லட்சக்கணக்கில் பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்களால் நிச்சயம் மாற்ற இயலாது. இதனால் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாத காகிதமாய் மாறுவதை தவிர்க்க அந்தப்பணத்தை நாட்டில் வாழும் ஏழை, எளிய மக்களுக்கு வழங்கலாம் என்ற முடிவை இந்திய தேசிய லீக் கட்சி எடுத்துள்ளது.

இதுகுறித்து அந்தக்கட்சியின் தலைவர் தடா ஜெ. அப்துல் ரஹிம் கூறுகையில், "2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் வங்கிகளில் டெபாசிட் செய்தால் வரி விதிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. இதனால் நிச்சயம்  வரி செலுத்தாமல் பதுக்கி வைத்துள்ள பணத்தை, வெளியில் கொண்டு வருவதில் சிரமம் ஏற்படும். மேலும் அரசு நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் கறுப்புப் பணத்தை மாற்றவும் இயலாது. இதனால் அந்தப்பணத்தை ஏழைகளுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால் அவர்களது வாழ்க்கை முன்னேறும். ஏழைகளுக்கு பணம் கொடுக்க தயங்கும் மற்றும் பயப்படுபவர்கள் எங்கள் கட்சி தலைமை அலுவலகத்தை நாடலாம். எங்களிடமும் தகவல் சொல்லத் தயங்கினால் அலுவலக வாசலில் பணத்தொட்டி திறக்கப்பட்டுள்ளது. அதில் உங்களது பணத்தை யாருக்கும் தெரியாமல் போட்டுவிட்டுச் செல்லலாம். எங்களிடம் தகவல் தெரிவித்தாலும் அது ரகசியமாக வைத்துக் கொள்ளப்படும். இந்த பணத்தொட்டி என்பது அட்டைப் பெட்டியால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் கோடிக்கணக்கான ரூபாய்களை போடலாம். இந்த பணத்தொட்டி 339, காயிதே மில்லத் ரோடு, ஆதம் மார்க்கெட் வளாகம், திருவல்லிக்கேணி என்ற முகவரியில் உள்ளது" என்றார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.