"வாழ்வோ..?? சாவோ...??? மோடியை அரசியலிலிருந்து நீக்காமல் விடமாட்டேன்..!!" – ‘மம்தா ஆவேசம்’5௦௦, 1௦௦௦ ரூபாய் நோட்டு செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நாட்டின் பல்வேறு இடங்களில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

அதன்படி, மேற்கு வங்காள மாநிலத்திலும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த போராட்டத்தின்போது நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசியதாவது,

5௦௦, 1௦௦௦ ரூபாய் நோட்டுகள் யார், யாருக்கு தேவைப்படுகிறது என்று கேட்டறியாமல் திடீரென்று தன்னை கடவுளாக பாவித்துகொண்ட பிரதமர் மோடி,மக்களைப்பற்றி கவலைப்படாமல் இதைப்போன்ற தடாலடி நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

 மேலும், நான் வாழ்கிறேனா,  சாகிறேனா என்பது பிரச்சனையல்ல. ஆனால், இந்திய அரசியலில் இருந்து பிரதமர் மோடியை நீக்காமல் விடமாட்டேன் என்று ஆவேசமாக தெரிவித்தார்.Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.