சவுதி ஜித்தா நகர் உணவகங்களில் நாய் இறைச்சி உணவு காணொலி.!சவுதி அரேபியாவின் ஜித்தா நகரில் உள்ள உணவகங்களில் நாய் இறைச்சியை வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பல உணவகங்களுக்கும் அந்நாட்டு சுகாதார அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டுள்ளது.

இது பற்றி மேலும் தெரியவருவதாவது,
ஜித்தா நகரில் குலைல், அல்கும்றா ஆகிய இடங்களில் உள்ள உணவகங்களில் நாய் இறைச்சியை உணவுக்காக பரிமாறப்படுவதாக அந்நாட்டு (பல்தியா ) சுகாதார  அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம்  அங்கிருந்த பல உணவகங்கள் சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


இத்தேடுதல் நடவடிக்கையின் போது பல உணவகங்களில் நாய் இறைச்சி பரிமாறப்பட்டது உறுதிசெய்யப்பட்டதுடன் இவ்விடயத்தில் தொடர்புடையோர்களான பாக்கிஸ்தான் நாட்டை சேர்ந்த சிலரும் மற்றும் எமன் நாட்டை சேர்ந்த சிலரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்மந்தப்பட்ட உணவகங்கள் நிரந்தரமாக சீல் வைத்து மூடப்பட்டுள்ளன. அதன் நிர்வாகிகள்  கைது செய்யப்பட்டுள்ளனர்

ஒரு சுகாதார அதிகாரி தெரிவிக்கும் பொழுது  குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது  தண்டனை மிக கடுமையாக இருக்கும் என்று தெரிவித்தார்  கைது செய்யப்பட்டுள்ளவர்களின் நாடுகளை சேர்ந்த தூதரக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பரிசோதனை தீவிரமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.