மியான்மர் (பர்மா) அரசு மீது கடும் நடவடிக்கை எடுக்க இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தல் !மியான்மர் (பர்மா) வில்  முஸ்லீம் மக்கள் மீது பௌத்த தீவிரவாதிகளினால் நடத்தப்படும் தாக்குதலை உடனே நிறுத்தக்கோரியும்  அந்நாட்டின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டியும்  ஐக்கிய நாட்டு சபை சென்னை அலுவலகத்தில்  இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக புகார் மனு அளிக்கப்பட்டது .

சர்வதேச சட்டங்களுக்கு கட்டுப்படாத மியான்மர் அரசின் முஸ்லீம்கள் மீதான தாக்குதலை உடனே தடுத்து நிறுத்திடவும்,பொருளாதார தடை உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையை வலியுறுத்தும் விதமாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் எஸ்.எம். பாக்கர்,துணை தலைவர் முகம்மது முனிர்,பொருளாளர் பிர்தவ்ஸ்,பொதுசெயலாளர் முகம்மது சித்திக்,துணைப்பொதுச்செயலாளர் முஹம்மது ஷிப்லி ஆகியோர் சென்னை பெசன்ட் நகரிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் துணை அலுவலக பொறுப்பதிகாரி திரு.சச்சிதானந்தம் அவர்களை இன்று(03-11-2016)பிற்பகல் 3.00 மணியளவில் நேரில் சந்தித்து மனு அளித்தனர்

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.