அமீரக வானிலை முன்னறிவிப்பு: புழுதிக் காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு!அமீரக தேசிய வானிலை மையத்தின் முன்னறிவிப்பின்படி எதிர்வரும் 3 நாட்களுக்கு நாட்டின் வட பகுதிகளான ஷார்ஜா, அஜ்மான், உம்மல் குவைன், ராஸ் அல் கைமா மற்றும் ஃபுஜைரா ஆகிய எமிரேட்டுகளில் பலத்த புழுதிக் காற்றைத் தொடர்ந்து மழை பெய்யும் என அறிவித்துள்ளது. எனவே, மூச்சுத் திணறல் போன்ற பாதிப்புள்ளோர் கவனமாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

துபை மற்றும் ஓமன் பகுதிகளில் கடல் பலமாக ஆர்ப்பரிப்பதுடன் சுமார் 7 அடி முதல் 10 அடி வரை அலைகளும் எழும். அதேவேளை துபை, அபுதாபி மற்றும் ராஸ் கைமா கடற் பிரதேசங்களில் அதிகமாக மழை பெய்யும் என்றாலும் நகருக்குள்ளும் அதன் தாக்கமிருக்கும்.

பனி மூட்டமும் அதிகரித்து காணப்படும் அதேவேளையில் தட்பவெப்பம் கடற்கரை பிரதேசங்களில் 28 டிகிரி முதல் 30 டிகிரி செல்ஷியஸ் வரையும், நகருக்குள் 30 டிகிரி முதல் 32 டிகிரி வரையும், மலைப் பிரதேசங்களில் 23 டிகிரி முதல் 26 டிகிரி செல்ஷியஸ் வரை நிலவும் என்றும் அறிவித்துள்ளது.

Source: Gulf News
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.