முத்துப்பேட்டை யூனியன் அலுவலக சாலையில் தேங்கி கிடக்கும் குப்பைகள்முத்துப்பேட்டை யூனியன் அலுவலகம் அருகே சாலையோரம் தேங்கி கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயத்தில் பொதுமக்கள் உள்ளனர். முத்துப்பேட்டை பகுதியில் பேரூராட்சி நிர்வாகம், குப்பைகள் சரிவர அள்ளாததால் நகர முழுவதும் அதிகளவில் தேங்கி கிடக்கிறது. இதனால் சமீபத்தில் பல்வேறு பகுதியில் தொற்றுநோய் பரவி பலரும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் பேரூராட்சி 4வது வார்டு பகுதியான யூனியன் அலுவலக சாலையில் உள்ள ரேஷன் கடை அருகே மாதக்கணக்கில் குப்பை மற்றும் கழிவுப்பொருட்கள் தேங்கி கிடக்கிறது.

மேலும் சுற்றுப்புற பகுதியில் வசிக்கும் மக்களும், குப்பைகள் சேகரிக்கும் துப்புரவு தொழிலாளி, சுற்றுப்புறத்தில் குப்பைகளை சேகரித்து வந்து இங்கு கொட்டுவதால் எந்நேரமும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதை பேரூராட்சி நிர்வாகமும் உடனுக்குடன் அள்ளுவது கிடையாது. யூனியன் அலவலகம், வேளாண்மைத்துறை அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகம் மற்றும் பல்வேறு தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு செல்லும் முக்கிய பகுதியாக உள்ளதால் ஏராளமான மக்கள், மாணவர்கள் அப்பகுதியை கடக்கும்போது மூக்கை பிடித்து கொண்டு செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.

இதனால் இப்பகுதியில் குப்பைகள் கொட்டுவதை தடை செய்ய வேண்டும். அல்லது அப்பகுதி தெருக்களில் பிளாஸ்டிக் குப்பை தொட்டிகள் வைக்க வேண்டுமென பொதுமக்கள் ேகாரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த ராஜீ கூறுகையில், முக்கிய பகுதியாக உள்ள இந்த இடத்தை பேரூராட்சி நிர்வாகமே குப்பை கொட்டும் இடமாக உருவாக்கியுள்ளது.  இதனால் நாங்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகிறோம், தெருக்களுக்கு என தனியாக பிளாஸ்டிக் குப்பை தொட்டிகளை வைத்தால் சுகாதார சீர்கேடுகளை தவிர்க்கலாம் என்றார்.

இதுகுறித்து நக்கீரன் கூறுகையில், இப்பகுதியில் ரேஷன் கடை, யூனியன் அலுவலகம், வேளாண்மைத்துறை அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகங்கள் உள்ளன. அங்கு பணியாற்றும் அரசு அலுவலர்களும் இந்த வழியாக தான் செல்கின்றனர். ஆனால் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் அருகே பொது குடிநீர் குழாயும் உள்ளது. இதில் தண்ணீர் பிடிக்க வரும் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இப்பகுதி மக்கள் நலன்கருதி உடனடியாக குப்பை மற்றும் கழிவுப்பொருட்களை அகற்றி சுகாதாரத்தை காக்க வேண்டும் என்றார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.