குடும்ப அட்டையில் ஆதார் விவரம் பதிவுசெய்ய அறிவுறுத்தல்குடும்ப அட்டையில் ஆதார் எண் விவரங்களை பதிவு செய்யாதவர்கள் நியாயவிலைக் கடைகளில் உடனடியாக பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கடலூர் மாவட்டத்தில் கணினி மயமாக்கப்பட பொது விநியோகத் திட்டத்தை செம்மையாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக குடும்ப அட்டைதாரர்களின் செல்லிடப்பேசி எண் மற்றும் அனைத்து குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண் விவரங்களை குடும்ப அட்டையுடன் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை ஆதார் எண் விவரங்களை பதிவு செய்யாத குடும்ப அட்டைதாரர்கள் நியாயநிலைக் கடையில் உடனடியாக பதிவு செய்து கொள்ள வேண்டும். ஆதார் அட்டை பெறாதவர்கள் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகம், இ-சேவை மையங்களை அணுகி பதிவு செய்து, அரசின் சேவையை பெறுமாறு அதில் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.