ட்ரம்ப் வென்றது எப்படி? ரகசியம் அம்பலமாதுஅமெரிக்காவின் 45-வது அதிபராக வெற்றி பெற்றிருக்கிறார் டொனால்ட் ட்ரம்ப். இந்த தேர்தல் முடிவுகளில் ஆச்சரியம் என்ன என்றால் ட்ரம்ப் வெல்வார் என்று எவர் ஒருவரும் நினைக்கவில்லை.

ஊடகங்கள் வெளியிட்ட கருத்துக்கணிப்பிலும் சரி, மக்கள் மன நிலையிலும் சரி ஹிலாரியே முன்னிலை வகித்தார். இப்போது ட்ரம்பின் வெற்றி அதை எல்லாம் மாயை என்றாக்கியிருக்கிறது.
ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் அரசியல் பின்னணி உடையவர். அவரது கணவர் பில்கிளிண்டன் 2 தடவை அமெரிக்க அதிபராக இருந்துள்ளார். ஹிலாரி கிளிண்டன் ஒபாமா அரசில் அதிகாரம் மிக்க வெளியுறவு துறை மந்திரியாக பதவி வகித்து அனுபவம் பெற்றவர்.
டொனால்ட் டிரம்போ தொழில் அதிபர் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் அவரை ஒரு கோமாளி போல நினைத்தனர் பெரும்பலான அமெரிக்க மக்கள்.கோடீசுவரான இவர் குறுகிய காலத்தில் குடியரசு கட்சியின் வேட்பாளராகி அதிபர் தேர்தலில் மக்களின் மனதை கவர்ந்து வெற்றி வாகை சூடியது அமெரிக்க மக்களுக்கு மட்டுமல்ல அரசியல் ஆய்வாளர்களுக்கும் இந்த வெற்றி பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபராக 270 வாக்குகள் பெற்றால் பெரும்பான்மை கிடைத்து விடும். ஆனால் ட்ரம்ப் பெற்றதோ
276 வாக்குகள் . இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்ட ஹிலாரி 218 வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. ட்ரம்பை நெருங்க ஹிலாரி 58 வாக்குகள் கூடுதலாக பெற வேண்டியிருந்தது.
அகதிகளுக்கு எதிரான முஸ்லீம்களுக்கு எதிராக வெள்ளை இன ஆதரவோடு பேசிய ட்ரம்பின் பேச்சுக்கள் இளம் வெள்ளையர்களை ஈர்த்திருக்கிறது. ஆனால் முற்போக்காக பேசிய ஹிலாரிக்கு வெள்ளையர் அல்லாதவர்களின் வாக்குகள் கிடைத்ததா என்பதே கேள்விக்குறியாகி உள்ளது.

ஹிலாரிக்கு பெரும் ஆதரவு உள்ள மாகாணங்கள் என கணிக்கப்பட்ட ஒஹியோ, ஃபுளோரிடா, வட கரோலினா ஆகிய அனைத்தும் டிரம்புக்கு ஆதரவாக மாறின. அதுதான், ஹிலரி கிளிண்டனின் வெற்றியில் கடும் பாதிப்பை உருவாக்கியது.
விர்ஜினியா, கொலராடோ மாகாணங்கள் விரைவில் விழந்த நிலையில், விஸ்கான்சினும் டிரம்புக்கு ஆதரவாக வீழ்ந்தபோது, ஹிலரியின் நம்பிக்கை தகர்ந்தது.பெண்களுக்கு எதிரானவர் கடுமையான சட்டங்களைக் கொண்டு வருவார் என்ற விமர்சனங்களை ஊடகங்களும் முற்போக்காளர்களும் கடுமையாக எதிர்த்த நிலையில் அதை சளைக்காமல் ட்ரம்ப் எதிர்கொணட விதமே அவருக்கு எதிர்மறையான எண்ணத்தை வாக்காளர்களிடம் உருவாக்கி பதவியில் அமர்த்தியிருக்கிறது.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.