காஷ்மீர் பற்றி விவாதித்தால் பேச்சுவார்த்தைக்கு தயார் : பாக்கிஸ்தான்பேச்சுவார்த்தைக்கு தயார், ஆனால் காஷ்மீர் பிரச்சனை குறித்து கண்டிப்பாக விவாதிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
காஷ்மீர் மாநிலத்தின் எல்லைக் கோட்டு பகுதியில் யுரி, சர்ஜிக்கல் தாக்குதல்களை தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகின்றது. அத்துமீறல்களில் ஈடுபடுவதாக இருநாட்டு ராணுவ வீரர்களும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனிடையே கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர்கள் மூன்று பேரும், அதேபோல் இந்திய வீரர்கள் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மூன்று பேர் உட்பட 7 பேரும் கொல்லப்பட்டனர்.

இதனை தொடர்ந்து, ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்கு தயார் என பாகிஸ்தான் வலியுறுத்தி இருந்தது. இந்நிலையில், பேச்சுவார்த்தைக்கு தயார், ஆனால் காஷ்மீர் பிரச்சனை குறித்து கண்டிப்பாக விவாதிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் நேற்று தெரிவித்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் பார்லி.,யில் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் பேசுகையில், “எங்களது எல்லையை பாதுகாக்க முழு திறனும் உள்ளது. எக்காரணத்தை கொண்டும் இந்தியாவின் ஆதிக்கத்தை எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். காஷ்மீர் மக்களின் உரிமைகளுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவு கொடுக்கும்” என்று கூறினார்.
இதனிடையே, பஞ்சாப் மாநிலத்தில் நடைபெறும் ஆசியாவின் அமைதி மாநாட்டில் கலந்து கொள்வதற்கு அஜிஸ் அடுத்த வாரம் இந்தியா வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.