ஈரானில் மரணதண்டனையை எதிர்நோக்கி சிறையில் வாடும் அஹ்லுஸ்ஸுன்னாக்கள்ஈரானில் சிறுபான்மையாக வாழ்கின்ற அஹ்லுஸ்ஸுன்னாக்களுக்கு எதிராக பல்வேறு கொடுமைகளை ஈரானிய ஷீஆ அரசு செய்துவருகின்றது. இந்த வகையில் ஈரானிலுள்ள அஹ்லுஸ்ஸுன்னா மதபோதகர்கள் மற்றும் மார்க்க கல்வியை கற்றுக் கொண்டிருந்த மாணவர்கள் என 200க்கும் மேற்பட்டவர்களை ஈரானிய ஷீஆ அரசு கைது செய்து அவர்களை சிறைகளில் அடைத்துள்ளது எனும் தகவலை “ஈரானிய சிறைகளில் வாடும் அஹ்லுஸ்ஸுன்னா அரசியல் கைதிகளை பாதுகாப்பதற்கான அமைப்பு” தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பு தமது உத்தயோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரானின் ரஜாய் சிறைச்சாலையில் உள்ள அஹ்லுஸ்ஸுன்னாக்கள்  30 பேருக்கு மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் மிகவிரையில் ஒட்டுமொத்தமாக மிகப்பெரும் மரணதண்டனையை ஈரான் அரசு நிறைவேற்ற திட்டமிட்டுவருவதாக தெரிவித்துள்ளது. இவர்கள் தேசிய பாதுகாப்பு எதிராக செயற்பட்டதாகவும், ஆட்சிக்கு எதிராக பிரச்சாரம் செய்ததாகவும் ஈரானிய நீதிமன்றில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும் அந்த அமைப்பு குறிப்பிடுகையில் இவ்வாறு சிறையிலுள்ள அஹ்லுஸ்ஸுன்னாக் கைதிகளுக்கு ஏனைய கைதிகளுக்கு வழங்கப்படுகின்ற எந்தவித சிறு சலுகையும் வழங்கப்படுவதில்லை எனவும் தெரிவித்துள்ளது. அத்துடன் இவர்களுக்கு இரண்டு விதத்தில் சித்திரவதைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

1. உடலியல் ரீதியாக மேற்கொள்ளப்படுகின்ற சித்திரவதைகள்.
இதில் கைதிகளுக்க மின்சார அதிர்ச்சி கொடுத்தல், கேபிள்களால் உடம்பில் தாக்குதல், மற்றும் நெருப்பில் காய்ச்சிய கம்பிகளால் உடம்பில் சூடுபோடுதல் என பல்வேறு சித்திரவதைகளை செய்து வருகின்றனர்.

2. உளவியல் ரீதியாக மேற்கொள்ளப்படுகின்ற சித்திரவதைகள்.
இதில் கைதிகளை பல நாட்களுக்கு பட்டிணி போடுதல், வலுக்கட்டாயமாக அவர்களின் தாடிகளை மழித்தல், அத்துடன் இஸ்லாமிய நம்பிக்கைகளையும் முஸ்லிம்களையும் இழிவுபடுத்தி பேசுவதும், அவர்களை திட்டுவதும், மேலும் கைதிகளின் குடும்ப அங்கத்தவர்களை அச்சுறுத்தல் போன்ற சித்திரவதைகளை செய்கின்றனர்.

இப்படியான கொடுமைகளில் தம்மை பாதுகாப்பதற்கான செயற்பாடுகளை முஸ்லிம்கள் முன்னெடுக்கவேண்டுமெனவும், தமக்காக அல்லாஹ்விடம் பிரார்த்திக்கும் படியும் சிறையில் உள்ள முஸ்லிம் கைதிகள் வேண்டுகோள்விடுத்து அவர்கள் இரகசியமாக அனுப்பிய செய்தி ஈரானிலுள்ள அஹ்லுஸ்ஸுன்னா கைதிகளுக்கு குரல் கொடுக்கும் அமைப்பினுடைய இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.அதேவேளை, முஸ்லிம்கள் தமது மதக் கடமைகளை செய்வதனை ஈரான் அரசு தடுத்து வருவதுடன், அவர்களது மத சுதந்திரத்தையும் மறுத்து வருகின்றனர். ஈரான் தலைநகர் தெஹ்ரானில் முஸ்லிம்களுக்கென்று ஒரு பள்ளிவாயல் கூட கட்டமுடியாதளவுக்கு முஸ்லிம்கள் ஒடுக்கப்படுவதுடன், முஸ்லிம்களுக்கென்று ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் காணப்பட்ட ஒரே ஒரு பள்ளிவாயலையும் தெஹ்ரான் மாநகரசபை மற்றும் ஈரான் பாதுகாப்பு பிரிவு இணைந்து கடந்த வருடம் ஜூலை மாதம் இடித்து தரைமட்டமாக்கியிருந்தனர். இவைகள் முஸ்லிம்கள் மற்றும் இஸ்லாத்தின் மீது ஈரானிய ஷீஆ அரசு கொண்டுள்ள கோபத்தின் வெளிப்பாடுகளையே காட்டுகின்றன.
இவன்
(Anti SIA)
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.