கொண்டையை மறைக்க மறந்த பாண்டே!தந்தி டிவியின் ஒரு நிகழ்ச்சி அறிவிப்பு அனைத்து மக்களையும் எதிர்பார்ப்புக்குள்ளாகியது. மெரினா பீச்சில் ஐஸ் விற்கும் சாமானியர் இசக்கிபாண்டி என்பவரை அழைத்து பாண்டேவுடன் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சி நடத்தப் போவதாக வந்த அறிவிப்புதான் அது.
கேள்விகள் அனைத்தும் அதிபுத்திசாலி பிரதமர் மோடி அவர்களால் அதளபாதாளத்திற்கு போய்விட்ட தற்போதைய பொருளாதார மந்த நிலை குறித்துதான். சமானியர் இசக்கிபாண்டி அவர்கள், மேற்படியார்கள் சொல்லிக் கொடுத்ததை அச்சு பிசகாமல் கிளிப்பிள்ளை மாதிரி அப்படியே கக்கி விட்டார். கீ….கீ
நீங்க ஐஸ் வித்து 5 லட்ச பேங்குல போட்டா அதில் 2 லட்சத்த அரசாங்கம் எடுத்துக் கொள்ளுமே என்ற கேள்விக்கு, எடுத்துக்கட்டும் சார், என் நாட்டுக்கு நான் கொடுக்காம யார் கொடுக்கிறது என்று பதிலளித்தார். கீ...கீ
மண்மோகன்சிங், இது ஒரு சட்டப்பூர்வ கொள்ளை என்கிறாரே! என்று கேட்டதற்கு, அவரு அப்டித்தான் சார் பேசுவார், மோடி நாட்டுக்கு நல்ல முடிவு எடுத்திருக்கார் சார். நாளைக்கி நான் பாயாச சோறு சாப்பிடனும்னா இன்னிக்கி பழைய சோறு சாப்பிட்டா தப்பில்லை சார் என்று சொல்லி அடித்தார். கீ...கீ
அவர் பேசிய பேச்சிலேயே மண்மோகன்சிங் யாரென்பதே அவருக்குத் தெரியாது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. கீ...கீ
மோடி இந்த திட்டம் குறித்து பல பேருக்கு முன்பே சொல்லி விட்டார் என்று ராகுல் சொல்கிறாரே என்று கேட்டதற்கு, அப்டியெல்லாம் இல்ல சார், இது திடீர்னு அறிவிச்சாங்க அதனால யாருக்கும் தெரியாது சார் என்று தெரிவித்தார் கூலிக்கு கூட்டிவரப்பட்ட சாமானியர் ஐஸ் விக்கும் இசக்கிபாண்டி. கீ..கீ
பாண்டியும் பாண்டேவும் சேர்ந்து பாண்டி ஆடுறாங்கோ! மண்டையை மறைத்த பாண்டேவுக்கு கொண்டையை மறைக்க துப்பில்லை. பாண்டேவுக்கு திராணியிருந்தால் தெம்பிருந்தால் இந்த நிகழ்ச்சியை ஒவ்வொரு பேங்க் வாசலிலும் நடத்த வேண்டும். முடியுமா? அல்லது சமீபத்தில் நியூஸ்18 ல் பேசிய பூக்காரம்மா மீன்காரம்மா புகழ் ஆட்டோ ஓட்டுனரை வைத்து இந்த நிகழ்ச்சியை நடத்த வேண்டும். முடியுமா? கீ..கீ
இத்துனை நாள் பேமண்டுக்கு காத்திருந்த வைக்கோ அவர்கள் டீலிங் ஓகே ஆனவுடன் அதிகாரக் கொள்ளை திட்டத்தை இன்றைக்கு வரவேற்கிறார். இத்துனைநாளும் பதுங்கிக் கிடந்த பாண்டே அவர்கள் அதிகாரக்கொள்ளை திட்டம் பிரமாதம் என்று இப்போது மூச்சு முட்ட பேசுகிறார். அப்டீன்னா இதுக்கு என்ன அர்த்தம்? நாய்களுக்கு எலும்புத்துண்டுகள் வீசப்பட்டு விட்டது என்று அர்த்தம். கீ..கீ
சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் விவாதம் செய்யும் BJP காரர்களை போல சாமானியர்கள் என்ற பெயரில் கூலிகள் சபையேற்றப்படுகிறார்கள். மக்கள்தான் சாக்கிரதையாக இருந்து கொள்ள வேண்டும்.


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.