அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்த பாஜக!நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஓம்சக்திசேகருக்கு புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

புதுச்சேரி நெல்லித்தோப்பு இடைத்தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெறுகிறது.  இதில் காங்கிரஸ் சார்பில் முதல்வர் நாராயணசாமியும், அதிமுக சார்பில் ஓம்சக்தி சேகரும் போட்டியிடுகின்றனர்.

காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, முஸ்லீம் லீக், உள்பட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனிடையே அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக முன்னாள் முதலமைச்சரும், என்.ஆர். காங்கிரஸ் தலைவருமான ரெங்கசாமி அறிவித்தார்.

இதனிடையே அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகரை ஆதரிப்பதாக அந்த மாநில பாரதிய ஜனதா கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய ஜனதா பொதுச்செயலாளர்கள் தங்க விக்ரமன் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர், காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமியை தோற்கடிக்கவே அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறினர்.

பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்து  போட்டிட உள்ளதாக என்.ஆர்.காங்கிரஸ்  நேற்று அறிவித்திருந்தது. ஆனால் இன்று அதிமுகவுக்கு என்.ஆர்.காங்கிரஸ் ஆதரவு தெரிவித்ததையடுத்து, பாரதிய ஜனதா இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.