முத்துப்பேட்டையில் ஏ.டி.எம். மையத்துக்கு மலர் வளையம் வைத்து ஆர்ப்பாட்டம்500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதனால் வங்கிகளில் பணம் எடுக்க முடியவில்லை. மேலும் ஏ.டி.எம்.களும் சரிவர செயல்படவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

இந்த நிலையில் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் பணம் மதிப்பு நீக்கத்தை கண்டித்து திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கம், தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முத்துப்பேட்டை பழைய பஸ் நிலையம அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்க செயலாளர் செல்லத்துரை தலைமை தாங்கினார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஒன்றிய செயலாளர் ராஜ்மோகன் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தின் போது பணம் இல்லாமல் மூடப்பட்டு இருந்த ஏ.டி.எம். மையத்துக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் வங்கி முன் நின்று மத்திய அரசுக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பினார்கள். இதில் பலர் கலந்து கொண்டனர்.


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.