முத்துப்பேட்டைமன்னார்குடியில் வேலைவாய்ப்பு முகாம்திருவாரூர் மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் வரும்  29ம் தேதி மன்னார்குடியிலும், 30ம் தேதி முத்துப்பேட்டையிலும் வேலைவாய்ப்பு முகாம்  நடைபெறுகிறது.  இதுகுறித்து கலெக்டர் நிர்மல்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவாரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்  சார்பில் படித்த ஆண்,பெண் இருபாலருக்கான வேலைவாய்ப்பு முகாம் வரும் 29ம் தேதி மன்னார்குடி பூமாலை வணிக வளாகத்திலும், மறுநாள் 30ம் தேதி முத்துப்பேட்டை  எஸ்.வி.கே அன்பு திருமண மண்டபத்திலும் நடைபெற உள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாம்களில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயதிலிருந்து 35 வயதுக்குட்பட்ட 8ம் வகுப்பு முதல் 12 மற்றும் டிப்ளமோ வரை படித்துள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். இதில் முன்னணி தனியார் தொழில்நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன. கலந்து கொள்ள விரும்புவர்கள் தங்களுடைய கல்விச்சான்றிதழ்களின் நகல்கள், குடும்ப அட்டை இருப்பிடச்சான்று நகல், சுயவிபரம் அசல் மற்றும் நகலுடன் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.