சட்டத்தை மீறிய' சவூதி இளவரசருக்கு சவுக்கடி தண்டனை நிறைவேற்றம்.!கடந்த மாதம் தான் ஒரு சவுதி இளவரசர் ஒருவருக்கு 'கொலைக்கு கொலை' என்ற இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில் தலை துண்டிக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டது முழு உலகின் பார்வையையும் ஆச்சரியத்துடன் சவுதியை நோக்கி திருப்பியது.

இந்நிலையில், மேலும் ஒரு இளவரசருக்கு கடந்த திங்கட்கிழமையன்று மாலை சவுக்கடியுடன் சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ள செய்தியை சவுதியிலிருந்து வெளிவரும் OKAZ எனும் அரபு தினசரியில் இன்று செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது.

ஜெத்தா நகர சிறையில் நிறைவேற்றப்பட்ட இந்த தண்டனை, 'சட்டத்தை மீறிய குற்றத்திற்காக' எனக் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர என்ன குற்றமென விளக்கமாக சொல்லப்படவில்லை. சவுக்கடியை தொடர்ந்து இளவரசர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Source: Gulf News
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.