துபாயில் மெடிக்கல் இன்ஷூரன்ஸ் இல்லையெனில் அபராதம் !துபாயில் மெடிக்கல் இன்ஷூரன்ஸ் எடுப்பதற்கு நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு கடந்த 2016 ஜூன் மாதத்துடன் முடிந்த நிலையில் இன்னும் 12 சதவிகிதம் பேர் இன்ஷூரன்ஸ் எடுக்காதிருப்பது தெரியவந்துள்ளதை அடுத்து உடனடியாக எடுக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர் இல்லையேல் மாதம் 500 திர்ஹம் என அபராதம் செலுத்த நேரிடும்.

முதலாளிகள் / நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களுக்கு இன்ஷூரன்ஸ் எடுத்து தர வேண்டியது கட்டாயம் மேலும் இதற்காகும் செலவை ஊழியரிடமிருந்து திரும்ப வசூலிக்கக்கூடாது. அதுபோல் தங்களின் தனி பொறுப்பில் உள்ள பெற்றோர், மனைவி, குழந்தைகள் ஆகியோர்களுக்கும் இன்ஷூரன்ஸ் செய்வது கட்டாயம்.

அதுபோல் வீட்டுப்பணிப் பெண்கள், வீட்டு வேலைக்காரர்கள் போன்றவர்களுக்கும் இன்ஷூரன்ஸ் செய்வது முதலாளியின் கடமை. குறைந்தபட்ச அடிப்படை இன்ஷூரன்ஸ் திட்டத்திற்கான பிரிமியம் ஆண்டொன்றுக்கு 600 திர்ஹமே என்பதால் மாதமாதம் கட்டும் அபராதத் தொகை 500 என்ற அபராதத்துடன் ஒப்பிடும் போது குறைவான தொகையே செலுத்த நேரிடும்.

அபுதாபியில் இந்த கட்டாய இன்ஷூரன்ஸ் திட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது என்பதும் இன்ஷூரன்ஸ் இருந்தால் மட்டுமே நமக்கோ அல்லது நாம் ஸ்பான்ஸர் செய்யும் குடும்ப உறுப்பினர்களுக்கோ பாஸ்போர்ட்டில் ரெஸிடன்ஸ் விசா அடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Gulf News
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.