டான்ஸ் கிளப் : சீரழியும் நமது சமுதாயத்தவர்!!!சகோதரர்களே! ஏக இறைவனாம் அல்லாஹ் நமக்கு அருளிய பெரும் பாக்கியம் நம்மை முஸ்லீம் குடும்பத்தில் பிறக்க செய்து  நம்மை முஸ்லீம் உம்மத்தாக்கியதே அதற்காக நாம் அல்லாஹ்விற்கு அதிகம் அதிகம் நன்றி சொல்ல கடமை பட்டு இருக்கிறோம்...

நாம் நம் தாய் தந்தையரை  மனைவி மக்களை  குடும்பத்தார்களை பிரிந்து
நம் நாடு துறந்து   பொருளாதார தேட்டத்திற்காக வெளிநாட்டில் வேலை செய்து பிழைத்து கொண்டு இருக்கிறோம்.

இங்கு சிலபேருக்கு அவர்களுடைய தகுதிக்குமீறிய வேலை நல்ல சம்பளம். பலபேருக்கோ  கஷ்டமான வேலை பற்றாக்குறை சம்பளம்  இப்படித்தான் வெளிநாட்டு வழக்கை போய்க்கொண்டு  இருக்கிறது .. எல்லாம் இறைவன் செயல்...

இங்கு சிலபேர்களுடைய வாழ்க்கைத்தரம் மிகவும் மோசமான  நிலையில்  இருக்கிறது     அல்லாஹுவும் அவனது தூதரும் எதை எல்லாம் வெறுத்து நமக்கு கூடாது என்று தடுத்தார்களோ  மது மாது, சூது வட்டி போன்ற ஹராமான  வழியில் வாழ்ந்து கொண்டு  இருக்கிறார்கள் என்பதை நாம் கண் கூட்டாக  பார்க்கிறோம்  இது போலுள்ளவர்கள் நம் குடுமபதவர்களாகவோ  நம் நண்பர்கள் வட்டத்தில் உள்ளவர்கலாகவோ இருக்கலாம் அல்லாஹ் அவர்களுக்கு நல்ல அறிவை கொடுக்க தூஆ செய்வோம்.

அதுபோல துபாய் போன்ற நாடுகளில் வேலை செய்வோர்  இங்கு டான்ஸ் கிளப் பார்களை பற்றி கேள்வி பட்டு இருப்பீர்கள்.
 இந்த   டான்ஸ் கிளப்களில் நமது  சமுதாயத்து  ஆண்கள்  மோகம்  கொண்டு எப்படியெல்லாம் சீரழிகிறார்கள் என்று பார்க்கிறோம்
அதில்   தன் வாழ்க்கையே தொலைத்தவர்கள் ஏராளம் பேர் உள்ளார்கள்  வியாழன் வெள்ளி  சனி கிழமை இரவுகளில்  இந்த டான்ஸ் கிளப்களில் கூட்டம் அலைமோதுவதை நாம் பார்த்து இருக்கிறோம்..

அங்கு கூடும் கூட்டத்தினர் மது போதையில்  தன் சுய நினைவு இழந்து   பாடும்  ஆடும் மங்கைகளின் மாயவலையில் விழுந்து   பணத்தை வரி இறைப்பார்கள் இன்னும் போதை தலைக்கேறி  அங்கு ஆடும் தன் அபிமான மங்கைகளுக்கு மாலை கிரீடம் அணிவிப்பாவர்களும் உண்டு  ஒவ்வொரு மாலை கீரிடம் அணியும் பொழுதும்  தன்னுடைய பொருளாதாரம் வீணாக செலவாகிறது என்ற எண்ணம் மது போதையின் உச்சத்தில் இருப்பவனுக்கு எப்படி  தெரிய வாய்ப்பு இருக்கிறது  இன்னும் சில பேர் ஒரு படி மேலேபோய்  தன் கொண்டுவந்த பணமெல்லாம் காலியாகி அடுத்த கட்டமாக தன்னுடைய கிரிடிட் கார்டை பயன்படுத்த ஆரம்பித்து விடுவார்கள் ..  டான்ஸ் கிளப் மோகத்தால்  பலபேர் இன்று கடனாளியாக திரிகிறார்கள் பலபேர்களுக்கு தான் பார்த்துவந்த வேலையே போயிருக்கிறது .... இந்த டான்ஸ் கிளப் மோகத்தால் பல  பேர்கள்
தற்கொலை முயற்சிக்கு தள்ளப்பட்டுள்ளனர்   என்பதே உண்மை

நம் கடமை மறந்து  நம் வீட்டின் சூழ்நிலை பொருளாதாரம் மறந்து  சீரழிந்து கொண்டு இருக்கிறோம் என்பதை மறந்து  அந்த மோகம் நம்மையும் நம் குடும்பத்தாரும்  கொஞ்சம் கொஞ்சமாக பழி வாங்கி கொண்டுஇருக்கிறது

அல்லாஹ் நமக்கு சிந்திக்கக்கூடிய சக்தியை தந்து இருக்கிறன்  இது போன்ற மார்க்கத்திற்கு ஆகாத காரியங்கள் அனைத்தையும் விட்டு நன் மக்களாக வாழ அல்லாஹ்  அருள் புரிவானாக    - அமீன்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.