இந்தியா மீண்டும் நீர்மூழ்கி கப்பல்களை அனுப்பினால் பதிலடி - பாகிஸ்தான் கடற்படை தளபதிஇந்தியா மீண்டும் நீர்மூழ்கி கப்பல்களை அனுப்பினால் பதிலடி கொடுக்கப்படும் என்று பாகிஸ்தான் கடற்படை தளபதி அட்மிரல் முகமது ஜாகதுல்லா கூறிஉள்ளார்.

பாகிஸ்தானில் நடைபெறும் 9வது சர்வதேச பாதுகாப்பு கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் பேசிய அட்மிரல் முகமது ஜாகதுல்லா பேசுகையில், ”இந்தியா மீண்டும் தன்னுடைய நீர்முழ்கி கப்பல்களை பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் அனுப்பினால், பாகிஸ்தான் தன்னுடைய இறையாமையை காக்க பதிலடி கொடுக்கும்,” என்றார்.

பாகிஸ்தான் கடற்படை செய்தி தொடர்பாளர் கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில், பாகிஸ்தானின் தென்பகுதி எல்லையில் கடலுக்கு அடியில் இந்திய நீர் மூழ்கி கப்பல்கள் சில தங்களது மோசமான எண்ணத்தை நிறைவேற்றி கொள்வதற்காக நுழைய முயன்றன. அதை உடனடியாக எங்களது கடற்படை கண்டுபிடித்துவிட்டது. இதனால் உஷார் அடைந்த பாகிஸ்தான் கடற்படை தனது அசாத்திய திறமையை பயன்படுத்தி, இந்திய நீர்மூழ்கி கப்பல்களை எங்களுடைய நீர் எல்லைக்குள் நுழைய விடாமல் வெற்றிகரமாக தடுத்து பின்வாங்க வைத்தது.
என்று கூறப்பட்டு இருந்தது.

“பாகிஸ்தான் கடற்படை தன்னுடையை எல்லையை பாதுகாக்க முழுவதும் தயார்நிலையில் உள்ளது, எந்தஒரு ஆத்திரமூட்டும் நடவடிக்கைக்கும் சரியான பதிலடியை பாகிஸ்தான் கடற்படையால் கொடுக்க முடியும்,” என்றார். பாகிஸ்தான் பாதுகாப்பு ஆய்வாளர் தஸ்னீம் அகமது பேசுகையில், உளவு விமானங்கள் மூலம் இந்திய நீர்மூழ்கி கப்பல்களின் நுழைவை காண முடியும் என்றார்.

இந்தியா நிராகரிப்பு

இந்திய நீர்மூழ்கி கப்பல்களை தடுத்துவிட்டோம் என்ற பாகிஸ்தான் விமானப்படை அறிக்கையை ”அப்பட்டமான பொய்கள்,” என்று இந்திய கடற்படை முற்றிலும் நிராகரித்தது. இதுபற்றி இந்திய கடற்படை செய்தி தொடர்பாளர் டி.கே.சர்மா கூறுகையில், “இந்திய நீர் மூழ்கி கப்பல்களை தடுத்து நிறுத்தி பின்வாங்க வைத்ததாக பாகிஸ்தான் கூறுவது அப்பட்டமான பொய். இந்திய நீர்மூழ்கி கப்பல்கள் எதுவும் பாகிஸ்தான் நீர் எல்லைக்கு அடியில் நடமாடவில்லை“ என்றார்.Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.