டிரம்பின் உண்மையான பெயர் தாவூத் இப்ராகிம், அமெரிக்கா சென்றது எப்படி? பாகிஸ்தான் மீடியா விளக்கம்அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்ப் பாகிஸ்தானில் பிறந்தவர், அவருடைய உண்மையான பெயர் தாவூத் இப்ராகிம் என்று  பாகிஸ்தான் மீடியா, பரபரப்பு சைத்யகியுள்ளது  அவர் எப்படி அமெரிக்கா சென்றார் என்பதற்கு விளக்கமும் கொடுத்து உள்ளது.

டொனால்டு டிரம்ப் வருகிற ஜனவரி மாதம் அடுத்த அதிபர் ஆகிறார். இவர் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களை பேசி சர்ச்சையில் சிக்கியவர்.

அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டு உள்ள டொனால்டு டிரம்ப், தன்னுடைய கொள்கைகளை இந்தியாவிற்கு சாதகமாக முடக்கலாம் என்பது பாகிஸ்தானிய வல்லுநர்கள் கணிப்பாக உள்ளது. டிரம்ப் வெற்றிப் பெற்றதை தொடர்ந்து பாராட்டு தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் ”டிரம்புக்கு பாகிஸ்தான் சார்பாகவும், என் சார்பாகவும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். டிரம்பின் வெற்றி உண்மையிலேயே அமெரிக்க மக்களின் வெற்றியாகும்,” என்று குறிப்பிட்டார். பாகிஸ்தான் வெளியுறவுத்துறையும் டிரம்பை வெகுவாக பாராட்டியது. மேலும், எப்போதோ, காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயார் என்று அறிவித்ததற்கு, வெற்றிப்பெற்ற பின்னர் பாராட்டு தெரிவித்தது பாகிஸ்தான்.

இந்நிலையில் பாகிஸ்தான் அரசைவிட ஒருபடி மேலே சென்று உள்ள அந்நாட்டு மீடியா, பாகிஸ்தானில் பிறந்தவர் என்ற புதிய சர்ச்சை கிளம்பிஉள்ளது. இது குறித்து பாகிஸ்தானின் ‘நியோ நியூஸ்’ செய்தி சேனல் செய்தி வெளியிட்டுள்ளது.

அதில், ‘டிரம்ப் 1954-ம் ஆண்டு வசிரிஸ்தானில் பிறந்தார். அவரது உண்மையான பெயர் தாவூத் இப்ராகிம் கான். இவரது பெற்றோர் விபத்தில் மரணம் அடைந்து விட்டதால் அவர் அனாதையானார். அதை தொடர்ந்து இங்கிலாந்து வாழ் இந்திய ராணுவ தளபதி அவரை லண்டனுக்கு அழைத்து சென்றார். அங்கு அமெரிக்காவை சேர்ந்த டிரம்ப் குடும்பத்தினர் தத்து எடுத்து வளர்த்தனர். அதை தொடர்ந்து அவர் டொனால்டு டிரம்ப் ஆனார். மேலும், அவரது குழந்தை பருவ போட்டோவையும் வெளியிட்டது. தற்போது அந்த செய்தி படத்துடன் பாகிஸ்தானில் வைரல் ஆக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.