அதாஉல்லாஹ் மீது போர்த்திய காவி உடையை புத்தி பேதலித்த தலைவர்களுக்கு போர்த்துங்கள்.அஸ்மி அப்துல் கபூர்-
 கடந்த அரசில் இடம்பெற்ற முஸ்லீம் விரோத செயற்பாடுகளின் போது பாரளுமன்றத்தில் பொதுபலசேனா முஸ்லீம் களை தனி நாடு கோர தூண்டுகிறது என தைரியமாக குரல் கொடுத்த அதாஉல்லாஹ்வுக்கு அரசுடன் இருக்கிறார் என்ற காரணத்துக்காக காவியுடை அணிந்து கொச்சைப்படுத்தியவர்கள்,  இன்று தெளஹீத் ஜமாஅத் அமைப்பையும் பொதுபல சேனாவை யும் ஒப்பிடுகின்ற போதும்முன் அதன் தலைவரை சிறை கூண்டுகளுக்குள் அனுப்புமளவு இன்றைய தலைவர்கள் மேற் கொள்ளும் நடவடிக்கைகளுக்கு என்ன ஆடை அணியப் போகிறீர்கள்?

இவர்கள் இன்றைய நிலை தொடர்பான கருத்துக்களை அவதானியுங்கள் தயாகமே சிலையை அகற்றினால் ராஜினாமா செய்வேன் எனும் போது வாய் மூடிக்கிடந்ததும் சிலை வைக்க அனுமதி வழங்கியமையும் சிலை வைப்பதால் யாரும் மதம் மாறப்போவதில்லை என்று கூறுகின்ற தலைமைகளுக்கு என்ன கூறுகிறீர்? போர்த்த முடியாதா இவர்களுக்கு காவியுடை? தீகவாபிக்கு சொந்தமான நிலம் என குறிப்பிட்டு எல்லை போட்டு மறைந்த தலைவரால் வழங்கியவற்றுக்கு மேலதிகமாக கல்முனை பொத்துவில் எல்லாம் அவற்றுக்கு சொந்தமன தயாகமே கூறுகின்ற போது வாய் மூடிக்கிடந்தவர்களுக்கு என்ன பதில் கூறப் போகிறீர்?

வெறும் நாற்பதாயிரம் வாக்களித்த அதாஉல்லாஹ் விடம் நீங்கள் எதிர்பார்த்த விடயங்களை ஏன் நல்லாட்சிக்கு வழங்கிய மொத்த வாக்குகளுக்கும் இவர்களிடம் எதிர்பார்க்க முடியாது அன்று அதாஉல்லாஹ் சொல்லிய இவற்றுக்கு பின்னால் எஜமானர்கள் உள்ளார்கள் என்பதை இன்று நல்லாட்சி தலைவர்கள் கூறுகின்ற போது நீங்கள் ஏதும் பேசாமல் இருப்பதும் இன்றைய சூடு சொறணையற்ற போக்குக்கு உதாரணமாகும் மகிந்த ஆட்சியில் இல்லை இருந்தாலும் மகிந்தவை அனைத்துக்கும் சாடிக் கொண்டு கண் துடைப்பு பொழப்பு நடத்தும் எம்மவர்களின் போக்கையும் அபிவிருத்தி மாயையை காட்டி நாட்டின் நிலையை மூடி மறைக்கின்ற விந்தையையும் எம் மக்கள் புரியாமல் இருப்பார்களா?

ஐரோப்பிய யூனியனுக்காக இலங்கை முஸ்லிம்களின் தனியார் சட்டத்தில் கை வைத்தாலும் நாம் எதும் சொல்ல மாட்டோம் சமாதான சகவாழ்வு  ஏற்பட நிதானமாக செயற்படுங்கள் இது வேறு விதமான நகர்வுகள் மூலம் ஏற்படுகின்ற விளைவு என அதாஉல்லாஹ் கூறிய போது கூக் குரலிட்டவர்கள் எங்கே? இங்கே எம்மவர்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் ஏற்படும் போது எம் தலைவர்கள் வெளிநாட்டு விஜயம் மேற் கொள்வதை கூட நாம் பெருமையாய் உரைக்கிறோம்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.