தஞ்சையில் பாஜக கம்யூனிஸ்ட் மோதல்தஞ்சையில் பாஜ இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஒருவரையொருவர் தாக்கி கொண்டது தொடர்பாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தஞ்சை மாநகர இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் ராஜேந்திரன் மகன் மணிபாரதி (21). விளார் சாலை பகுதியில் வசித்து வருகிறார். இவர் நாஞ்சிக்கோட்டை சாலை சாந்தி நகரில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே பாஜவை சேர்ந்த பெயர் தெரியாத நபர் ஓட்டி வந்த கார் தாறுமாறாக வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்து தடுமாறி மணிபாரதி கீழே விழுந்தார். இதுதொடர்பாக காரில் வந்தவருக்கும் மணிபாரதிக்கும் தகராறு ஏற்பட்டது.

இதில் மணிபாரதி தாக்கப்பட்டார். இதுகுறித்து தெற்கு போலீசார் வழக்குப்பதிந்து மணிபாரதியை தாக்கியவர்களை தேடி வருகின்றனர். இதையறிந்து மருத்துவமனைக்கு சென்ற இந்திய கம்யூனிஸ்ட் நகர செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் அங்கிருந்த பாஜ நிர்வாகி கர்ணனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கர்ணன் கொடுத்த புகாரின்பேரில் ராஜேந்திரன், மணிபாரதி உட்பட 4 பேர் மீது தெற்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.